200 கிலோமீட்டர்.. காதலனை பார்க்க.. தஞ்சை டூ மதுரைக்கு நடந்தே.. டிக்டாக் போட்டபடி.. அதிர வைத்த பெண்!

காதலனை சந்திக்க 200 கிமீ நடந்தே வந்துள்ளார் ஒரு டிக்டாக் பெண்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தஞ்சை to மதுரை வரை 200 கிமீ, ஊரடங்கு என்றும் பாராமல் தனது டிக்டாக் காதலனை பார்க்க தஞ்சையில் இருந்து மதுரை வரை ஒரு பெண் நடந்தே வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ஊரடங்கு நேரத்தில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்த அந்த பெண், இளைஞரை ஒருதலையாக காதலிப்பவராம்!!

தஞ்சையை சேர்ந்தவர் அந்த பெண்.. பிஎஸ்சி பட்டதாரி.. டிக்-டாக் ஆப்பில் நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.. அப்போதுதான் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமானார்.

 lockdown: tiktok girl walks 200 km to meet his boyfriend video

சில நாட்களிலேயே அந்த இளைஞரை காதலிக்க ஆரம்பித்தார்.. தன் காதலை இளைஞரிடமும் சொன்னார்.. ஆனால் அவர் அதை ஏற்காததுடன் பெண்ணுடன் டிக்-டாக் பழக்கத்தையும் கைவிட முயன்றார்.. ஆனால் பெண் தன் காதலில் உறுதியாக இருந்தார்.. ஒருதலையாகவே காதலித்தும் வந்தார்.

இந்த சமயத்தில்தான் ஊரடங்கு அமலுக்கு வந்தது.. ஒரு கட்டத்தில் இளைஞரை பார்க்காமல் அந்த பெண்ணமல் இருக்கு முடியவில்லை.. அதனால் தஞ்சையில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக மதுரைக்கு நடந்து வருவதாக கூறி, டிக்-டாக் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தஞ்சையில் இருந்து மதுரைக்கு சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.. தஞ்சையில் கிளம்பும்போது வீடியோ பதிவிட்ட பெண்.. நடந்து வரும்போதெல்லாம் கூட அடிக்கடி டிக்டாக் வீடியோ பதிவிட்டார்.. சாலையில் நடந்து வருவது, லவ் பாட்டு பாடுவது, எந்த இடத்தில் நிற்கிறேன், எந்த இடத்தில் நடந்து வருகிறேன் என்பது உட்பட ஒவ்வொன்றையும் டிக்டாக் மூலமாகவே செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்டு கொண்டே வந்தார்..

இவரது ஒவ்வொரு வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானதும், மக்களுக்கு அதிர்ச்சியையும் தந்தது. இறுதியில் நேற்று முன்தினம் மதியம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் நடந்து வருவதாகவும், பைக்கை எடுத்து கொண்டு வந்து தன்னை அழைத்து செல்லும்படியும் வீடியோ பதிவிட்டார்.. இதை பார்த்ததும் டிக்டாக்வாசிகள் பலரும் பெண்ணை சரமாரியாக திட்ட ஆரம்பித்தனர்.. மேலும் பலர் அட்வைஸ்களை தந்தபடியே இருந்தனர்.

Recommended Video

    கடலூர் போலிஸ் வெளியிட்ட வித்தியாசமான விழிப்புணர்வு வீடியோ

    இப்போதும் அட்வைஸ் தந்தபடி உள்ளனர்.. போலீஸார் இந்த வீடியோவை பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை மீட்டு பத்திரமமாக வீட்டில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் 200 கிமீ ஒரு பெண் காதலனை பார்ப்பதற்காக நடந்தே வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இன்னும் இந்த ஊரடங்கு முடிவதற்குள் என்ன பாடுபடுத்த போகிறதோ?!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+