அது என்ன நாயின் வாயில்.. பார்த்த உடன் பதறிப்போன மதுரை இளைஞர்.. மிரண்ட போலீஸ்
மதுரை: மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தின் எதிரே பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கி வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் பச்சிளம் குழந்தையை யாரோ கொன்றுள்ளனர். அந்த குழந்தையின் உடலை சாக்கடையில் வீசியிருக்கிறார்கள். அப்படி வீசப்பட்ட உடலின் தலையை நாய் ஒன்று கவ்விக்கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. இங்கு பணம் எடுப்பதற்காக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர் வந்துள்ளார்

குழந்தை தலை
அவர் அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யனார் நாயை விரட்டி உள்ளார். நாய் தலையை போட்டுவிட்டு ஓடிவிட்டது.

போலீசார் விசாரணை
இதனிடையே அய்யனார் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் உடல்
குழந்தையின் தலையில் சாக்கடை ஒட்டி இருந்த நிலையில். பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாக்கடை
மதுரையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் பச்சிளங்குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாராவது பச்சிளம் குழந்தையை கொன்று சாக்கடையில் வீசியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பெண் குழந்தைகள்
இதனிடையே மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் மகளிா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications