மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிடிக்காத கல்யாணம்.. தொலைந்து போன மதுரை திவ்யா.. 2 வருடத்தில் பட்டதாரியாக ஜார்க்கண்டில் மீட்பு

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த திவ்யா என்ற இளம் பெண் திருமண வாழ்க்கை பிடிக்காததால் வீட்டை விட்டு சென்ற நிலையில் தொலைந்துபோனார், 2 ஆண்டுக்கு பின் ஜார்க்கண்டில் பட்டதாரியாக அவரை போலீசார் மீட்டனர்.- வீடியோ காலில் கலங்கிய பெற்றோரிடம் திவ்யா கலங்கியபடி பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    2 வருட முன்பு வீட்டை விட்டு சென்ற பெண் பட்டதாரியானார்.. வீடியோ காலில் பார்த்து கலங்கிய பெற்றோர் - நெகிழ்ச்சி வீடியோ

    மதுரை எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற 24வயது இளம்பெண் கடந்த 2017ஆம் ஆண்டு கருமாத்துர் பகுதியை சேர்ந்த உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்,

    இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ல் தனது தாயின் வீட்டிற்கு திரும்பிய நிலையில் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.

    பெற்றோர் புகார்

    பெற்றோர் புகார்

    பெற்றோர்கள் கணவருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த திவ்யா காரணத்தால் தனது வீட்டில் இருந்து வெளியேறினார்.. கடந்த 2019 மே மாதம் எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து இளம்பெண் திவ்யாவை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்,

    சிறப்பு படை

    சிறப்பு படை

    இதனிடையே மதுரை மாநகரில் நீண்ட நாட்களாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான சிறப்பு படையினருக்கு திவ்யா காணாமல் போன வழக்கு மாற்றப்பட்டது,

    வீடியோ கால்

    வீடியோ கால்

    இதனையடுத்து திவ்யாவை தேட தொடங்கிய நிலையில் திவ்யா அவரது செல்போனில் அடிக்கடி பேசிய விவரங்களை சேகரித்தனர். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு ஆசிரியர் படிப்பு படித்துவருவதாக போலீசிடம் கூறியிருக்கிறார். திவ்யாவை பெற்றோரிடம் செல்போன் மூலமாக வீடியோவில் காவல்துறையினர் பேசவைத்தார்கள்.

    மீட்கப்படும் திவ்யா

    மீட்கப்படும் திவ்யா

    இதனை தொடர்ந்து திவ்யா மற்றும் அவரது பெற்றோர்கள் வீடியோ காலில் கண்கலங்கியபடி கதறி அழுது பேசியிருக்கிறார். இதையடுத்து ஜார்க்கண்ட் போலீஸ் மூலம் திவ்யாவை பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். காணாமல் போய்விட்டதாக நினைத்த தனது மகளை காவல்துறையினர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்து கொடுத்ததோடு தன் மகள் பட்டதாரியாக இருப்பதை நினைத்து மனம் நெகிழ்ந்தனர்

    English summary
    Divya, a young woman from Ellis nagar, Madurai, got lost after leaving home as she did not like married life. she was rescued by the police 2 years later as a graduate in Jharkhand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X