மதுரையே குலுங்குது.. திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்.. சிக்னலில் வந்த சத்தம்.. அங்கே பார்த்தால்? செம்ம
மதுரை: மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில், வாகன ஓட்டிகளுக்கு திடீரென அந்த சர்ப்ரைஸ் வந்து சேர்ந்தது.. இதனால், இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.
கடந்த வருடம் கோவை மாநகரில் திடீரென ஒரு மாற்றம் தென்பட்டது.. அதாவது, முக்கிய சாலை சந்திப்புகளில் ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் செயல்பட்டு வருகின்றன.. ஆனால், பாதசாரிகள் இந்த சிக்னலை கடந்து செல்வதற்கு ஏற்ற, பிரத்யேக சிக்னல் என்று எதுவும் கிடையாது.. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்...

நடுரோடு: நடுரோட்டில், வாகனங்களுக்கு மத்தியில்தான் பாதசாரிகளும், சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது.. அதனால்தான், கோவை காவல்துறையே இதற்கு ஒரு தீர்வை கண்டது.
அதன்படி, சிக்னல்களில் பாதசாரிகளின் பாதுப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிடவும், உடனடியாக சிக்னல்களில் பாதசாரிகள் கடந்து செல்வதற்கு வசதியாக, 'கவுன்ட் டவுன்' சிக்னல் வசதி, பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல மேம்படுத்தப்பட்ட 'மார்க்கிங்' வசதி, சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்திகளை ஒலிபரப்பும் வசதி, பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர் ஒலிபெருக்கி மூலம், அறிவுரை வழங்கும் வசதி என பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட்டன.
இந்த நவீன வசதிகளுடன் கூடிய, புதிய சிக்னல் திறப்பு விழாவும், அப்போது லஷ்மி மில்ஸ் சந்திப்பில் நடந்தது.. பிரபல இசையமைப்பாளர்களின் இன்னிசை கோர்வைகளும் ஒலிபரப்பாகும் என்றும் போலீஸ் அதிகாரிகள் அப்போது கூறியிருந்தனர்.
சென்னை, திருச்சியிலும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டு, அதற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து மதுரையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
போக்குவரத்து கமிஷனர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் ஆகி யோரின் முயற்சியில் கடந்த 28-ந்தேதி முதல் மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் உள்ள 32 சிக்னல்களில் கரோக்கி இசை ஒலிபரப்பு செயல்பாட்டில் இருக்கிறது. போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் வழிகாட்டுதலில், போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின் மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் காதில் இனிமையான, கரோக்கி இன்னிசை காதில் விழுகிறது.. வழக்கமாக சிக்னல்கள் வாகன ஓட்டிகள் காத்திருக்க நேரும்போது, கடும் எரிச்சலாவார்கள், டென்ஷன் ஆவார்கள்.. காரணம், அந்த நேரத்தில் அவர்களின் சூழல் அப்படியிருக்கலாம்.
அமைதியான மனநிலை: எனவே, வாகன ஓட்டிகளை அமைதியான மனநிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிக்னலில் காத்திருக்கும்போது, இனிமையான இசை காதில் விழுந்து, வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
இடையிடையே, "இரு சக்கர வாகனம் இருவர் செல்வதற்காக மட்டுமே, படியில் பயணம் நொடியில் மரணம், வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம், ஹெல்மெட் அணிவது அவசியம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்று வருகின்றன.. இந்த புதிய அதிரடிக்கு, வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
போக்குவரத்து சிக்னல்கள்: குறிப்பாக போக்குவரத்து சிக்னலில் அதிக நேரம் காத்திருக்கும் கோரிப்பாளையம், காள வாசல், ஆரப்பாளையம், தெற்குவாசல், பெரியார் நிலையம், கீழவாசல் சிக்னல்களில் காத்திருப்ப வர்கள் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதை பெரிதும் வரவேற்று வருகிறார்களாம்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications