ஆ.ராசா நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. பகிரங்க மிரட்டல் விடுத்த இந்துத்வா நிர்வாகி அதிரடி கைது!
மதுரை : திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டி அவரது நாக்கை அறுத்துக்கொண்டு வருபவருக்கு ரூ. 1 கோடி பரிசு என ஃபேஸ்புக்கில் பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்து மதம் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் பேச்சு இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக்கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் தருவதாக இந்து மக்கள் புரட்சி படை மாநில செயலாளர் கண்ணன் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில், உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை
சமீபத்தில் சென்னையில் நடந்த திராவிடர் கழக நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான், நீ பஞ்சமன் தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. இன்னும் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்து மதம் குறித்து இழிவாகப் பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர்.

நாக்கை அறுத்தால் 1 கோடி
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் என்பவர் ஆ.ராசாவுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து மக்கள் புரட்சி படை எனும் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வரும் கண்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

1 கோடி, ஒரு ஏக்கர் நிலம்
கண்ணன் வெளியிட்ட பதிவில், "இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அன்னிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்.பி ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். இந்துக்களை விபச்சாரிகள் எனக்கூறி வரும் ஆ.ராசாவின் நாக்கை அறுத்து கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ரூபாய் ஒரு கோடியும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

அதிரடி கைது
அவரது இந்த ஃபேஸ்புக் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவினர் ஆதாரத்துடன் உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில செயலாளர் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications