வர்றதே கிடையாது.. நாடாளுமன்றத்தில் மோடி பெயிலாயிட்டார்! இப்படி நடந்ததே இல்லை! சு.வெங்கடேசன் சுளீர்!
மதுரை : 17ஆவது குளிர்கால கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவும் இல்லை விவாதங்களிலும் கலந்து கொள்ளவில்லை. வருகை பதிவேட்டில் பெயில் ஆகியுள்ளார் மோடி என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அகில இந்திய அங்கன்வாடி பத்தாவது மாநில மாநாடு மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது மாநாட்டிற்கு முன்பாக 3000க்கும் மேற்பட்ட பெண்கள் பேரனியாக நடந்து வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு மாநாட்டின் சிறப்புரை ஆற்றினார்.
பரபர சூழல்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் துவங்கியது.. ராஜ்யசபா தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

சு வெங்கடேசன்
நிகழ்ச்சியில் பேசிய அவர்," உங்களுடைய பணியில் முக்கிய பொறுப்பு குழந்தைகளின் வருகை மற்றும் வளர்ச்சி.வரவு செலவு போன்றவைகள் முக்கியமாக பார்ப்பீர்கள். இந்த மூன்று விஷயத்திலும் முக்கியமான வரவு செலவு விஷயத்தில் பாரதத்தின் நரேந்திர மோடி தேர்ச்சி பெறாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா எந்தவித வளர்ச்சி பாதையை நோக்கி செல்லாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய ஒரு செயலாக இருந்து வருகிறது.

மத்திய அரசு
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்திற்கு உணவு செலவிற்கு கூடுதலாக நிதி கேட்டால் 30 சதவீதம் குறைத்து இருக்கிறது என்பது மிக வேதனையான விஷயம். பிபிஎஸ் தொழிலாளர்கள் 600 பேர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் மிகவும் வருத்தத்துக்குரியது. மும்பை விமான நிலையத்தை வாங்குவதற்கு 12,500 கோடி ரூபாய் மத்திய அரசு தேசிய வங்கிகளில் கடனாக அளித்தது. ஆனால் ஒரே அறிவிப்பில் அனைத்தையும் ரத்து செய்தது மோடி அரசு.

பிரதமர் மோடி
இத்தனை கோடிகளை ஒரு தனி நபருக்கு தள்ளுபடி செய்ய முடிகிறது என்று சொன்னால் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு உணவு தர முடியாது என்று சொல்லுகிறது மத்திய அரசு. 17ஆவது குளிர்கால கூட்டத் தொடர் என்பது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் வருகை பதிவேட்டில் மிகவும் குறைந்த நாட்கள் வந்தது மோடி மட்டுமே என்பது உண்மையிலும் உண்மை. இந்த சுதந்திர இந்தியாவில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை. இந்த குளிர்கால கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் நல்லதொரு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மோடி சொல்லுகிறார்.

காசு இல்லை
ஆனால் இதுவரை எந்த ஒரு விவாதத்திலாவது கலந்து கொண்டிருக்கிறாரா மோடி? அறிவிப்பு 10ம் வகுப்பு
ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு போன்ற வகுப்புகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கக்கூடிய ஸ்காலர்ஷிப்புகளை நிறுத்தி வைத்தது தான் இந்த மத்திய அரசாங்கத்தின் சாதனை. ஏன் என்று கேட்டால் காசு இல்லை என்று சொல்லுகிறார். 20000 கோடியில் ராஜமாளிகை 8000 கோடியில் விமானம் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி போன்றவைகள் எல்லாம் ஆனால் இந்த அரசால் செய்ய முடிகிறது.

அங்கன்வாடி ஊழியர்
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் பொழுது அங்கன்வாடி ஊழியர்களுக்கு சொன்ன வாக்குரிகளை முதலமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும் என்பதை நான் வேண்டுகோளாக வைக்கிறேன். 25 ஆண்டுகளாக பணி செய்தும் கூட இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது அதை காரணத்தினால் பணி நிரந்தரமும் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நான் எந்த கிராமத்திற்கு சென்றாலும் முதலில் செல்வது அங்கன்வாடிக்கு தான். ஆனால் அங்கன்வாடிக்கு என சொந்த கட்டிடங்கள் இன்னும் இல்லாமல் இருப்பது வேதனை. உடனடியாக சொந்த கட்டிடங்களை கட்ட வேண்டும்" என கூறினார்.