மதுரையில் மைதிலி.. "சூர்யாவை அசிங்கப்படுத்திட்டாரு".. சீறிய அம்மா.. விஸ்வரூபமெடுத்த சிறுவன் விவகாரம்
மதுரை: மதுரையில் பள்ளி மாணவனை கடத்திய வழக்கு தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.. சூர்யா என்ற பெண்ணின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணயை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரின் 14 வயது மகன், கீழமாத்தூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்... இந்நிலையில், கடந்த ஜூலை 11ம் தேதி காலை 8 மணிக்கு, மாணவன் சென்ற ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று, ஆட்டோ டிரைவரை தாக்கி மாணவனை கடத்தி சென்றிருக்கிறது.

மிரட்டல்: அதாவது, ஆட்டோவில் சிறுவன் பள்ளிக்கு சென்றபோது ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் சேர்த்து கடத்தி, மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து, ரூ.2 கோடி பணம் தரவேண்டும், தராவிட்டாலோ, போலீஸுக்கு சென்றாலோ பையனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறது.
இதையடுத்து பதறிப்போன மாணவனின் அம்மா மைதிலி ராஜலட்சுமி தந்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்...
மதுரை கும்பல்: சிறுவன் இருக்குமிடத்தை ட்ரேஸ் செய்து, கடத்தல் கும்பலை போலீசார் விரட்டி சென்றனர்.. போலீசார் விரட்டி வருவதை அறிந்த அந்த கும்பல், மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் சிறுவனை இறக்கிவிட்டு தப்பிச்சென்றது. இதனையடுத்து 3 மணி நேரத்தில் போலீசார் சிறுவனை மீட்டனர். பின்னர் தப்பிச்சென்ற கடத்தல் கும்பலையும் பிடிக்க தீவிரமானார்கள்.
அப்போது, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செந்தில்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோதுதான் சூர்யா என்ற பெண்ணின் பெயர் அடிபட்டது..
என்ன காரணம்: அதாவது, சிறுவனின் அம்மா மைதிலி ராஜலெட்சுமிக்கும், விளாத்திகுளத்தை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் இடையே கடன் வாங்கியது தொடர்பாக பிரச்சனை இருந்ததாகவும், இதன்காரணமாகவே, அப்பெண்ணின் சொத்தை ராஜலட்சுமி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும், எனவே, சூரியாவின் தூண்டுதலின்பேரிலேயே இந்த கடத்தல் நடந்ததாகவும் தெரியவந்தது. செந்தில்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்,
நெல்லையை சேர்ந்த அப்துல் காதர், தென்காசியை சேர்ந்த வீரமணி, காளிராஜ் உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ், மதுரையை சேர்ந்த சூர்யாவையும் விசாரிக்க முயன்றனர்.
தற்கொலை: ஆனால் அதற்குள் சூர்யா, குஜராத் மாநிலத்தில் பணியாற்றும் தன்னுடைய கணவரை தேடி அங்கு சென்றுவிட்டார்.. மதுரையைச் சேர்ந்த தனிப்படை போலீசார் காவலர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொள்ள வருகிறார்கள் என்பதை கேள்விப்பட்ட சூர்யா தற்கொலை செய்துக்கொண்டு நேற்றைய தினம் இறந்துவிட்டார்.
சூர்யா தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், குஜராத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிதான் சூர்யா என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
மைதிலி: இதையடுத்து, அவரது அம்மா உமா, மதுரை போலீசில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. பிறகு செய்தியாளர்களிடம் உமா பேசும்போது, "குஜராத்தில் பணியாற்றும் ரஞ்சித்குமார் ஐஏஎஸ் மணம் முடித்திருக்கிறா என்னுடைய மகள் சூர்யா.. சூர்யாவுக்கும், மைதிலி என்ற ராஜலட்சுமிக்கும் கடன் பிரச்சனை இருந்தது. ஆனால், என்னுடைய மகளின் பணம், சொத்துகளை மைதிலி மோசடி செய்து, அபகரித்துக் கொண்டனர்...
அத்துடன், தன்னுடைய மகனை கடத்திவிட்டதாக போலீஸில் பொய்யான புகாரையும் தந்து, மீடியாவில் என்னுடைய மகள் சூர்யாவின் பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விட்டார்.. இந்த மன உளைச்சலால்தான், என் மகள் சூர்யா தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கு காரணமான மைதிலி ராஜலட்சுமி, கிஷோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
குழப்பம்: சூர்யா அம்மாவின் இந்த குற்றச்சாட்டு அதிர வைத்து வருகிறது.. காரணம், குஜராத் கணவரை, சூர்யா பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படும்போது, சூர்யா எப்படி குஜராத்திலுள்ள வீட்டில் தற்கொலை கொண்டார்? என்பது குழப்பமாக உள்ளதாம்.. அந்தவகையில், மைதிலி ராஜலட்சுமியின் மகன் கடத்தப்பட்ட வழக்கு பல சந்தேகங்களை கிளப்பியிருப்பதால், போலீசார்தான் இதுதொடர்பான உண்மைகளை வெளிக்கொணருவார்கள் என்று மதுரைவாசிகள் எதிர்பார்க்கிறார்களாம்...!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications