மதுரையில் சாதி மாறி திருமணம் செய்த பெண்... மணமகனின் தந்தையை வெட்டி கொன்ற பெண்ணின் தந்தை
மதுரையில் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில் காதலனின் தந்தையை வெட்டிகொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை: சாதி ஆணவக்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மதுரையில் சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை, மணமகனின் தந்தையை வாளால் வெட்டி கொன்றுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் ராமச்சந்திரன். இவர் மதுரை திடீர் நகரில் வசித்து வந்தார். இவரது மகன் சிவ பிரசாத், அதே பகுதியைத் சேர்ந்த சடையாண்டி என்பவரின் மகள் சினேகாவை காதலித்தார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் சம்மதிக்கவில்லை. காதலிக்க தடை விதித்தாலும் அதையும் மீறி காதலித்தனர்.

காதல் திருமணம்
சினேகாவும் சிவ பிரசாத்தும் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து திடீர் நகர் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து சமரசம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர்.

சமாதானப்பேச்சு
இந்த நிலையில் சிவ பிரசாத்தின் தந்தை ராமச்சந்திரன் மட்டும் காவல் நிலையத்திற்கு வந்து காவலர்களிடம் மகனின் திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக கூறி சமாதானமாக சென்று விட்டதாக தெரிகிறது. அதேபோல் சினேகாவின் தந்தை சடையாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் சமரச பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று தெரிகிறது.

வாக்குவாதம்
நள்ளிரவு நேரத்தில் ராமச்சந்திரனை சந்தித்துள்ளார் சடையாண்டி. பெரியார் பேருந்து நிலையம் அருகே இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது, அதனையடுத்து சடையாண்டி தான் மறைத்து வைத்திருந்த வாளால் ராமச்சந்திரனை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராமச்சந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல் நிலையத்தில் சரண்
இதனையடுத்து சடையாண்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட மகள் மீதான ஆத்திரத்தில் மணமகனின் தந்தையை வெட்டி கொலை செய்து காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications