கொரோனா நிதி அனுப்பிய சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்... போனில் வாழ்த்து
சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த 1,000 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சிறுவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளை பரிசாக வழங்கி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை: சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 1,000 ரூபாய் பணத்தை கொரோனோ நிவாரண நிதியாக முதல்ருக்கு அனுப்பி வைத்த சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தும் நன்றியும் கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ-தீபா தம்பதியின் 7 வயது மகன் ஹரீஸ்வர்மன், தான் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை கொரோனோ பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நிவாரண நிதியாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தான்.
சிறுவன் ஹரீஸ் தன் கைப்பட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும் வேண்டுகோள் விடுத்து கடிதமும் எழுதியிருந்தான்.

சைக்கிள் பரிசு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் செயலை பாராட்டும் விதமாக புதிய சைக்கிள் ஒன்றினை பரிசாக அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி அளித்தார். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் மதுரை வடக்கு சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவுமான கோ.தளபதி மூலம் செல்போனில் நேரடியாக தொடர்பு கொண்டு சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துக்கள் தாத்தா
முதல்வர் பேசுகிறார் என்பதைக் கேட்ட சிறுவன், வாழ்த்துக்கள் தாத்தா என்று கூறினான். அதைக்கேட்ட முதல்வர் நன்றி நன்றி என்று கூறினார். சைக்கிள் வாங்கி கொடுத்தமைக்கு நன்றி தாத்தா என்று கூறினான் சிறுவன் ஹரீஸ்.

செல்போனில்
சிறுவனிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், தற்போது கொரோனோ காலம் என்பதால் வெளியே சைக்கிள் ஓட்ட வேண்டாம் எனவும் நன்றாகப் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

முதல்வரின்
உண்டியல் சேமிப்பு பணத்தை கொரோனா நிதியாக அனுப்பி வைத்த சிறுவனின் செயலைப் பாராட்டி முதல்வர் சைக்கிள் வாங்கி கொடுத்துடன் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த நிகழ்வு மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஹரீஸ்வர்மனை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications