அதிகாலையிலேயே அதிர்ந்த மதுரை.. திடுதிப்பென வந்த என்ஐஏ! பெரியார் பேருந்து நிலையம் அருகே ரெய்டு
மதுரை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீட்டில் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் திடீர் சோதனை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரையில் என்.ஐ.ஏ. திடீர் சோதனையில் அதிகாலை முதல் ஈடுபட்டு வருகிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளது காசிமார் தெரு. மதுரையின் முக்கிய வீதிகளில் ஒன்றான இங்கு வசிக்கும் முஹம்மது தாஜுத்தீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலையிலேயே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முஹம்மது தாஜுத்தீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஹம்மது தாஜுத்தீன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது சகோதரர் வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் இவருக்கு தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. மதுரை மாநகர போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் உள்ளார்கள். இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காசிமார் தெரு முழுக்க முழுக்க போலீசார் மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தீவிர சோதனையில் எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications