மோடி கண்டிப்பாக தமிழர் தான்.. மோடி தான் உண்மையான டெல்டாக்காரர்.. அண்ணாமலை சொன்ன காரணம்!
மதுரை: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் தமிழ் மீது ஆர்வம் காட்டுவதால் நிச்சயமாக அவரும் தமிழர்தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேட்டுக்கு பதிலாக கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்துக்கு காளை வளர்ப்பவர்ர்கள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என யாருமே செல்ல தயாராக இல்லை. இந்த மைதானத்தை வேறு விதத்தில் பயன்படுத்த அரசு யோசிக்க வேண்டும். மைதானத்துக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதை பாஜக கண்டிக்கிறது.

தமிழகத்தில் எந்த திட்டமாக இருந்தாலும் பெரியார், அண்ணா, கருணாநிதி பெயர்களை சூட்டுகின்றனர். இதை அனுமதித்தால் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த 3 பெயர்களை மட்டும் தான் சூட்ட வேண்டும் என சட்டம் நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது திமுக, காங்கிரஸ். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. அந்த மைதானத்துக்கு ஜல்லிக்கட்டுக்கு பாடுபட்டவர்களின் பெயரை சூட்ட வேண்டும்.
பிரதமர் மோடி என்ற மனிதருக்குத்தான் ஓட்டு. 2024 மக்களவைத் தேர்தல் மோடிக்கான தேர்தல். தேர்தல் கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். மோடியை ஏற்றுக்கொள்பவர்கள் பாஜக கூட்டணிக்கு வரலாம். பாஜக கூட்டணியை தேசிய தலைமை முடிவு செய்யும்.
கூட்டணி பெரிதாக இருந்தால் தான் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பது சரியல்ல. திமுக கூட்டணி பெரிதாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் பல கட்சிகளின் அரசியல் காலம் முடியப்போகிறது. தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது.
தற்போது திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? ஓங்கோலில் இருந்து வந்தவர்கள் இங்கு தமிழர் என்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் தமிழ் மீது ஆர்வம் காட்டுவதால் அவரும் தமிழர்தான்.
குஜராத்தில் பிறந்து தமிழ் மீதான ஆர்வத்தை காட்டும் மோடி கண்டிப்பாக தமிழன் தான். அவரை ஏன் தமிழன் என்று சொல்லக்கூடாது? டெல்டா பகுதிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மோடி தான் உண்மையான டெல்டாகாரர். அவர் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அதிக வாக்குகள் பெற்று சாதனை படைப்பார்” என்று அண்ணாமலை கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications