ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக
மதுரை: மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் ஹோட்டல் ஒன்றுக்குள் சென்று முஸ்லீம் மதப்படி ஹலால் செய்யப்பட்ட உணவு என்றால் இந்துக்கள் வர மாட்டோம் என்று சர்ச்சையாக பேசிய வீடியோ மீண்டும் டிரெண்ட்டாகி இருக்கிறது. மதுரையில் கணிசமான அளவிற்கு இஸ்லாமியர்கள் இருக்கும் சூழலில், இந்த வீடியோ மீண்டும் பரவுவது அதிமுகவுக்கும் பின்னடைவாக மாறி இருக்கிறது.
மதுரையின் 10 தொகுதிகளிலும் தேர்தல் களம் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சுந்தர்.சி இடையில் வார்த்தை மோதல் நடந்து வருகிறது. அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ராஜன் செல்லப்பா இடையில் மறைமுக மோதல் அரங்கேறி இருக்கிறது.

மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தளபதியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சரவணன் சினிமா நட்சத்திரங்களுடன் வாக்கு சேகரித்து வருகிறார். அதேபோல் மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பூமிநாதனை எதிர்த்து பாஜக தரப்பில் ராம ஸ்ரீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவினர் தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை முன் வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதேபோல் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை விமர்சித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் இஸ்லாமியர்களின் வாக்கு சதவிகிதம் சுமார் 18 முதல் 20 சதவிகிதம் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 15% வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அவர்களின் வாக்குகளை கைப்பற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை மக்களிடையே விவாதம் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பாஜகவின் நிலைப்பாட்டை ஆதரித்துவிட்டனர்.
இப்படியான சூழலில் ராம ஸ்ரீனிவாசன் பேசிய வீடியோ ஒன்றை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இஸ்லாமிய உணவகம் ஒன்றுக்கு சென்ற ராம ஸ்ரீனிவாசன் அங்குள்ள ஊழியரை அழைத்து, தம்பி இது ஹலால் செய்யப்பட்டதா.. ஓனர் இந்துவா? முஸ்லீமா? ஹலால் ஏன் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த ஹோட்டல் ஊழியர், இஸ்லாமியர்களும் சாப்பிட வர வேண்டும் என்பதற்காக ஹலால் செய்கிறோம் என்று பதில் அளித்தார். அதற்கு ராம ஸ்ரீனிவாசன், அப்போ இந்துகள் வர மாட்டோம்.. நாங்கள் எப்படி சாப்பிடுவது என்று பேசி இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது சர்ச்சையான இந்த வீடியோ மீண்டும் வாட்ஸ் அப் குழுக்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதனால் ராம ஸ்ரீனிவாசனுடன் வாக்கு சேகரிக்க அதிமுகவினர் செல்ல தயங்கும் சூழல் உருவாகி இருக்கிறது. மதுரை தெற்கு தொகுதியில் மட்டும் மஹால், இஸ்மாயில்புரம், தெற்கு வாசல், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவிற்கு இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இதனால் ராம ஸ்ரீனிவாசன் சில மாதங்களுக்கு முன் பேசிய வீடியோ, தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications