ஒற்றுமையா? சாரி ரொம்ப லேட் ஆயிருச்சு.. சசிகலாவுக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்! என்னவாம்?
மதுரை : சசிகலாவின் ஒற்றுமை குறித்த ட்விட்டர் பதிவு காலம் கடந்த விவாதம் எனவும், எடப்பாடியாரை ஏகமனதாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது 100 சகவீதம் செல்லும் என்றும் , தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் கிறிஸ்டல் சமூக அமைப்பின் தொடக்க விழா பூங்கா முருகன் கோவில் உள்ள சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பத்து பேருக்கு சிறப்பு விருந்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் பொறுப்பாளர்கள் ஜெகன், முகமது உமர் மற்றும் மதுரை கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஆர்.பி.உதயகுமார்
நிகழ்ச்சிக்கு பின் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது," முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும், பேபி அணையை சீரமைத்த பின் 152 அடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அம்மா பெற்றுத்தந்தார்.கடந்த அம்மா ஆட்சி காலத்தில் மூன்று முறை 142 அடியாக முல்லை பெரியார் அணை நீர்மட்டம் தேக்கபட்டது

சட்டமா விதியா?
அணை என்பது தண்ணீரை தேக்கி வைக்க தான், அதற்காக விதியை நிர்ணயம் செய்வது நேரம், காலம் கொள்வது இயற்கைக்கு முரணானது, பருவமழை ஒத்துழைப்புடன் தான் நீரை தேக்க முடியும், தற்பொது ரூல்கர்வ் என்ற விதி அணை பாதுகாப்புச் சட்டத்தின் படி செயல்படுத்தப்படுகிறதா, அது சட்டமா விதியா, உத்தரவா, ஆணையா என்று தெரியாத நிலையில் விவாதம் பொருளாக உள்ளது

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் வரை சென்று உயர் நீதிமன்றம் இன்றைக்கு தெளிவான வரிக்கு வரி தெளிவான புரியாதவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எடப்பாடியாரை ஏகமனதாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது 100 சகவீதம் செல்லும் என்றும், தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடியாருக்கு பல பணிகள், கடமைகள் உள்ளது.

காலம் கடந்தது
சசிகலா ஒற்றுமை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளது குறித்த கேள்விக்கு காலம் கடந்த விவதாமாக உள்ளது. தீர்ப்புக்கு பிறகு அதிமுக எடப்பாடியார் தலைமையில், திமுக அரசை தோலுரித்து காட்டுவதற்கும், மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்குவற்கும் வேகத்தோடு உத்வேகத்தோடு உற்சாகத்தோடு தொண்டர்கள் உழைக்க தயாராகி செயல்பட தயாராகி கொண்டுள்ளனர், அதிமுகவை பொறுத்தவரை ஒற்றுமையாக உள்ளது என நீதிமேன்றமே தீர்ப்பளித்துவிட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கருத்து சொல்ல விவாதிக்க ஒன்றும் இல்லை" என்று கூறினார்.
-
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications