ஆபாச மோகன்.. அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் "டார்ச்சர்".. மிரட்டல்.. கொந்தளிக்கும் மதுரை!

மதுரை மருத்துவமனையில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு இளைஞர் ஒருவர் டாச்சர் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பெண் ஊழியர்களிடம் மோகன் என்பவர் ஓவர் டார்ச்சர் தந்துள்ளார்.. அவருக்கு பிடித்த மாதிரி பெண்கள் நடந்து கொள்ளவில்லை என்றால், அவ்வளவுதானாம்! கொரோனா ரணகளத்தில் இப்படி கிளுகிளுப்பில் இறங்கி உள்ளார் ஆபாச மோகன்.. இவர்மீது நடவடிக்கை கோரி புகார்கள் வலுக்கின்றன!

தற்போது சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று மதுரையில் உள்ளது.. இதனால் லாக்டவுனில் அந்த மாவட்டம் உள்ளது.. நாளுக்கு நாள் நோய்தொற்றும் அதிகரித்து வருகிறது.

இதனால், அங்குள்ள கொரோனா ஸ்பெஷல் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் நேரம்காலம் பார்க்காமல் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறார்கள்.. இவர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் உட்பட, ஒப்பந்த அடிப்படையில் ஆண்கள் பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் வேலைபார்த்து வருகின்றனர்.

வாட்ச்மேன்

வாட்ச்மேன்

அந்த வகையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தூய்மைப் பணி, வாட்ச்மேன் பணிகளை மேற்கொள்ள 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.. தனியார் நிறுவனத்தை சேர்ந்த மோகன் என்பவர் தான் இதற்கு சூபர்வைசராக உள்ளார்.. இவர்தான் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

வீட்டில் வறுமை என்பதாலேயே பல பெண்கள் இந்த ஒப்பந்த வேலைக்கு வந்துள்ளனர்.. அவர்களிடம் வேலையை காட்டி உள்ளார் மோகன்.. தன் ஆசைக்கு இணங்கும்படியும் கட்டாயப்படுத்தி உள்ளார். அவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டால், அந்த பெண்ணுக்கு வேலை குறைவாக தருவாராம்.. எதிர்ப்பு தெரிவித்தால், வேண்டுமென்றே வேலை பளுவை அதிகப்படுத்துவாராம்.

டார்ச்சர்

டார்ச்சர்

இதை பற்றி வெளியே புகார் சொன்னால், வேலையிலிருந்து தூக்கிவிடுவேன் என்று மிரட்டுகிறாராம்.. லாக்டவுன் சமயத்தில், ஏற்கனவே யார் கையிலும் காசு இல்லை.. அதனால் இந்த ஊதியத்துக்கு பணிபுரிந்து வந்த எத்தனையோ குடும்ப பெண்கள் வேலையை விட்டு நின்றுவிட்டார்களாம்.. இந்த விஷயத்தை ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என்று அந்த பெண்கள் புலம்புகிறார்களாம்.

நடவடிக்கை

நடவடிக்கை

இந்த பெண் ஊழியர்கள் என்றில்லாமல், கொரோனா நோயாளிகளை பார்க்க வரும் விசிட்டர்களையும் விட்டு வைப்பதில்லையாம் மோகன்.. அனைத்து புகார்களுமே மருத்துவமனை டீன் பார்வைக்கு போயுள்ளதாம்.. விரைவில் மோகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+