நாற்காலி தந்த தமிழ் மகன் உசேன்! இருக்கட்டும் நீங்க உட்காருங்கண்ணா! அமர மறுத்த எஸ்.பி.வேலுமணி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் அதிமுக மாநாடுக்கு முகூர்த்தக் கால் நடும் விழாவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டதும் அக்கட்சியின் அவைத்தலைவரான தமிழ் மகன் உசேன் எழுந்து நின்று வணக்கம் வைத்து தனது நாற்காலியில் அமருமாறு தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.

எல்லோர் முன்னிலையிலும் அவைத்தலைவர் எழுந்து நின்று வணக்கம் வைத்து அவரது இருக்கையில் அமரச் சொன்னதால் பதறிப்போன எஸ்.பி.வேலுமணி, இருக்கட்டும் நீங்க உட்காருங்கண்ணா எனக் கூறிவிட்டு வேறொரு நாற்காலியை எடுத்து வரச்சொல்லி தனியாக அமர்ந்துக்கொண்டார்.

Tamil magan Hussain who gave the chair! SP Velumani refused to sit down in Admk conference foundation stone ceremony

அதேபோல் கே.பி.முனுசாமி உட்பட சீனியர்கள் பலரும் எஸ்.பி.வேலுமணி என்ட்ரி கொடுத்தவுடன் கிடுகிடுவென ஆட்டோமெட்டிக்காக எழுந்து நின்று வணக்கம் வைத்தனர். ஓ.எஸ். மணியனும், பொன்னையனும் மட்டும் நாற்காலியில் இருந்து எழாமலேயே எஸ்.பி.வேலுமணிக்கு வணக்கம் வைத்தனர்.

இதன் மூலம் அதிமுகவில் மிக முக்கிய பவர் செண்டர் எஸ்.பி.வேலுமணி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாடுக்கான செலவில் எஸ்.பி.வேலுமணியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் அந்தளவுக்கு அவருக்கு கவனிப்பு பலமாக இருந்தது. எஸ்.பி.வேலுமணிக்காக ஆர்.பி. உதயகுமாரே தனது கைப்பட ஒரு நாற்காலியை தூக்கி வந்து போட்டார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள்.

எஸ்.பி.வேலுமணியை பொறுத்தவரை அதிமுக மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக உள்ளதால் இனி அடிக்கடி மதுரைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடுக்கு 42 நாட்கள் மட்டுமே உள்ளதால் பந்தல், மேடை, அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+