அமெரிக்க பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! அலசி ஆராய்ந்து செயல்வடிவம் தந்த முதலமைச்சர் ஸ்டாலின்!
மதுரை: அமெரிக்காவில் வேளாண்மைத்துறை மூலம் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் அந்த நாட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும், பல ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக பல மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் அந்த திட்டத்தை முதல்வர் கூர்ந்து கவனித்து அலசி ஆராய்ந்திருப்பது தெரிய வருகிறது.
தனது கனவுத் திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதல்வர் பேசியாவது;

அமெரிக்க பள்ளிகள்
''பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பது அமெரிக்காவில் US Department of Agriculture மூலம் பல மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, ஐரோப்பா நாடுகளிலும், குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்ஸ் நாட்டிலும், காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.''

ஆராய்ச்சி முடிவுகள்
''பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் அந்த நாட்டு மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும், பல ஆய்வு முடிவுகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மேலும், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு காலை உணவுத் திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.''

பண்டித அயோத்திதாசர்
''தமிழ்நாட்டுப் பிள்ளைகள் பசியால் வாடக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால்தான், இத்திட்டத்தை உடனடியாகத் தொடங்கி இருக்கிறோம். பள்ளிப் பிள்ளைகளுக்குக் கல்வியுடன் சேர்த்து உணவும் வழங்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தை முதலில் வெளிப்படுத்தினார் பண்டித அயோத்திதாசர் அவர்கள். அவரது பவுத்த சிந்தனையில் இது உதித்தது.''

முதல்வர் வேண்டுகோள்
''கலைஞர் மகனின் அரசு, கருணையின் வடிவான அரசாகச் செயல்படும் என உறுதி அளிக்கிறேன். அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், என்னுடைய அன்பான வேண்டுகோள் ஒன்றை நான் எடுத்து வைக்க விரும்புகிறேன். அரசானது தாயுள்ளத்தோடு இந்தத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. நீங்களும் தாயுள்ளத்தோடு இந்தத் திட்டத்தை பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எத்தகைய கவனத்தோடும், கனிவோடும் உணவு வழங்குவீர்களோ, அதைவிடக் கூடுதல் கவனத்தோடும், கனிவோடும் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.''
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications