மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக இதுவரை 12 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவு.. மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக இதுவரை 12 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆண்டு மருத்துவமனை கட்டுமானத்திற்கு எந்த செலவும் இல்லை என்று கூறியுள்ளது.

இதனிடையே தேனி மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

தென்மாவட்டங்களில் மக்கள் உயர்தர மருத்துவ வசதி பெறுவதற்காக 1928 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இடம் தேர்வு செய்வதில் தாமதம் தொடங்கி ஜப்பான் வங்கியிடம் கடன்பெற்று பணிகளை தொடங்குவதில் தாமதம் என நீண்ட காலமாக இழுத்து கொண்டே செல்கிறது.

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் இதற்கிடையே மருத்துவமனை கட்டுமானத்துக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

12 கோடி செலவு

12 கோடி செலவு

அதில், இந்த ஆண்டு மருத்துவமனை கட்டுமானத்துக்காக எந்த செலவும் இல்லை. இதுவரை ஒட்டுமொத்தமாக இதுவரை 12 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு கடிதம்

மத்திய அரசு கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே 50 முதல் 100 மருத்துவ இடங்களை உருவாக்கி மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்தலாம் என தலைமைச் செயலர் இறையன்புவுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதிதியுள்ளார். நடப்பாண்டில் 50 முதல் 100 மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம், அதற்கு தேவையான வசதிகள், வகுப்பறைகள், அலுவலகத்திற்குத் தேவையான இடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஏற்கும்

மத்திய அரசு ஏற்கும்

தற்காலிகமான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசிடம் வழங்கினால் மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக ஆகும் செலவுகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு, உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு

தமிழக அரசு

இதனிடையே தேனி மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+