Karur Tragedy: சிபிஐ விசாரணை கோரிய ஆதவ் அர்ஜுனா மனு.. அக்டோபர் 3 இல் விசாரணை
மதுரை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, கரூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். தவெக தலைவர் விஜயோ, தவெக நிர்வாகிகளோ இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை.
இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருப்பதாக மதுரை ஐகோர்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருக்கிறது. செந்தில் பாலாஜி குறித்து பேசியபோது மின் தடை செய்யப்பட்டது. செருப்பு, கற்கள் வீசப்பட்டன. திடீரென அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டன. மக்கள் மீது தடியடி நடத்த என்ன காரணம்.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற என்னை அனுமதிக்கவில்லை. கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியுள்ளார். தற்போது நீதிமன்றம் தசரா விடுமுறையில் இருப்பதால் இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications