மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசிடம் நிதி கேட்கும் தமிழக அரசு இதையும் செய்ய வேண்டும்.. பா.ஜ.க.வினர் கோரிக்கை!

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் படம் இருப்பது வழக்கம். இதேபோல் அங்கு பிரதமர் மோடியின் படமும் வைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களிலும் பிரதமர் படத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரி வருகின்றனர். சில நாட்களுக்கு மதுரை மாநகர் பாஜக தலைவர் பா.சரவணன் தலைமையில் பா.ஜ.க.வினர் மாவட்ட கலெக்டரிடம் பிரதமரின் படத்தை அளித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

 அடுத்து அரசியலுக்கு வருவீர்களா? சிரித்துக்கொண்டே கிருத்திகா உதயநிதி சொன்ன பளீச் பதில்.. வைரல்! அடுத்து அரசியலுக்கு வருவீர்களா? சிரித்துக்கொண்டே கிருத்திகா உதயநிதி சொன்ன பளீச் பதில்.. வைரல்!

பிரதமர் படம் வேண்டும்

பிரதமர் படம் வேண்டும்

இந்த நிலையில் இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மாநகர் பா.ஜ.க தலைவர் பா.சரவணன் தமிழகத்தில் கொரானா தடுப்பூசி முகாம்களிலும் பிரதமர் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களிலும் பிரதமர் படத்தை வைக்க வேண்டும் என கூறியுள்ள அவர் மத்திய அரசிடம் நிதி கேட்கும் மாநில அரசு பிரதமரின் படத்தை வைக்க மறுக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 மாநகராட்சி ஒதுக்கீடு

மாநகராட்சி ஒதுக்கீடு

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள புராதன வளர்ச்சி திட்டத்தில் புதிய வணிக வளாகத்தில் புராதன பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தேன், 12 கடைகளில் 2 கடைகள் மட்டுமே புராதன பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி ஒதுக்கீடு செய்தது.

அரசியல் அழுத்தம்

அரசியல் அழுத்தம்

10 கடைகளில் பிற பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது, முறைகேடாக மாநகராட்சி கடைகளுக்கான ஏலத்தை நடத்தியுள்ளது, நான் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மாநகராட்சியின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக முறைகேடாக மாநகராட்சி ஏலத்தை நடத்தியுள்ளது.

 மீனாட்சியம்மன் பேருந்து நிலையம்

மீனாட்சியம்மன் பேருந்து நிலையம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும், அன்னை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என பெயர் வைக்க பொது வாக்கெடுப்பு நடத்தலாம் தி.மு.க 3 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Madurai BJP leader P. Saravanan has demanded that the Prime Minister's picture has to be displayed in the Korana vaccination camps in Tamil Nadu. He said the DMK is in power with an additional 3 percent of the vote
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X