மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை மத்திய அரசு குறைத்தது.. தமிழக அரசு உயர்த்தியது.. சு வெங்கடேசன்!
மதுரை: நடப்பாண்டு பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு நிதியை குறைத்துள்ளதாகவும், தமிழக அரசு தேசிய அளவில் அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. 8ம் நாளான நேற்று பாத்திமா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், கடந்த 7 நாட்களாக மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள், மத்திய அரசின் நலத்திட்டங்களையும் கொண்டு சேர்த்து வருகிறோம். அனைத்து முகாம்களிலும் பல்வேறு தரப்பு மக்கள் இணைந்துள்ளனர். அனைவரும் சேர்ந்து ஒரு மக்கள் இயக்கமாக நடத்தியுள்ளோம்.

மத்திய அரசு நிதி குறைப்பு
நடப்பாண்டில் தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு தான். இந்த துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பொறுப்பில் வைத்துள்ளார். நடப்பாண்டில் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,038 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கம் மத்திய அரசு ரூ.10 கோடியை குறைத்துள்ளது.

சிறப்பு முகாம்
இந்த சிறப்பு முகாம்களை ஏடிஐபி திட்டத்தின் சிறப்பு அனுமதியை பெற்று நடத்தி வருகிறோம். அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடத்தப்படும் மூன்றாவது முகாம் இது. இதன் மூலம் அதிக மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர். அதேபோல் மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சியினர், மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் என பலரும் இந்த முகாமிற்காக பணியாற்றி வருகின்றனர்.

அரசு அமைப்புகள்
8 நாட்கள் முகாம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இன்னும் 5 நாட்கள் நடத்திவிட்டால், மதுரையில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை நம்மால் கொண்டு சேர்க்க முடியும். இந்த முகாமில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு, பேருந்து பாஸ், ரயில் பாஸ், அலிம்கோவின் உபகரணங்களுக்கான அளவீடு, கடன் தொகை உள்ளிட்ட 24 அரசு அமைப்புகள் இருக்கிறது.

அரசின் நலத்திட்டம்
இதனால் மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமை முடிந்த அளவு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டத்தால் பயனடையாத ஒரு மாற்றுத் திறனாளி கூட இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications