மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மோடி கிட்டயே சொல்லிடுவேன்".. எல்லாருக்கும் ஸ்டாலின்தானே முதல்வர்.. குஷியில் மதுரை ஆதீனம்..!

மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

மதுரை: ''எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என்று சொல்லி இருந்தேன்... மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்" என்று மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மதுரை: ஆதீன மடத்தில் பாஜக தலையீடா? மதுரை ஆதீனம் விளக்கம்!

    பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து மதுரை ஆதீனம் பேசியிருந்தார்..

    அதை தொடர்ந்து ஆளுங்கட்சியினரால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.

    நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை.. யார் தலையீடும் இல்லை.. மதுரை ஆதீனம் நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை.. யார் தலையீடும் இல்லை.. மதுரை ஆதீனம்

     இந்து அமைப்பு

    இந்து அமைப்பு

    இந்நிலையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு அரசால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் அதை வெற்றியாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.. அந்த வகையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கான தடை நீக்கப்பட்டதை வரவேற்று, மதுரையில் பக்தர்களுக்கு மதுரை ஆதீனம் இனிப்பு வழங்கினார். அப்போது அவர் சொன்னதாவது:

     பல்லக்கு தூக்குவது

    பல்லக்கு தூக்குவது

    "பட்டினப்பிரவேச தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். இதை முன்பே சமய தலைவர்களுடன் சுமுகமாக பேசி தீர்த்திருக்க வேண்டும். மற்ற ஆதீனங்கள் அரசுடன் ஒத்துப்போகும் போது, நான் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும். பல்லக்கு துாக்குவது என்பது ஏழாம் நுாற்றாண்டில் இருந்தே நடந்து வருகிறது.. இதனால் தடை செய்யக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று அனுமதி தந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

     கி.வீரமணிக்கு நன்றி

    கி.வீரமணிக்கு நன்றி

    இந்த விஷயத்தில் குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. குறிப்பாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வாழ்த்துக்கள். அவர் இவ்விஷயத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால், பட்டினப்பிரவேசம் என்றால் என்ன என்பதே யாருக்கும் தெரிந்திருக்காது.. ஆனால், இன்றோ உலகத்திற்கே தெரிந்து விட்டது... கஞ்சனுார் கோவில் இடங்களை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமித்ததுடன் மிரட்டுகின்றனர் என்று சொல்லி இருந்தேன்... தவறு செய்யும் திமுகவினரை கட்சியில் இருந்து நீக்குவேன் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இனி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...

     பெண் நிர்வாகி

    பெண் நிர்வாகி

    பள்ளத்தூரில் ஆதீன நிலத்தில் வீடு கட்டுவோம் என்று திமுகவை சேர்ந்த ஊர் தலைவர் மிரட்டுகிறார்... அவர் 6 லட்சம் ரூபாயை பாக்கி வைத்துள்ளார்... இப்படியே இருந்தால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? கஞ்சனூர் கோவில் பெண் நிர்வாக அதிகாரியோ, அன்னதானம் உண்டியலையே தூக்கி சென்று விட்டார்... அறநிலையத்துறைக்கும், அரசுக்கும் இதை பற்றி கடிதம் எழுதினேன்... ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை... அன்னதானம் நடக்காமலேயே அன்னதானம் நடந்ததாக அவர் கணக்கு எழுதி வைத்துள்ளார்.

    உண்டியல்

    உண்டியல்

    பாஜக, ஹிந்து அமைப்புகள் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.. அந்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் கவலைப்பட போவதில்லை... எல்லா சமய சம்பிரதாயங்களையும் முதல்வர் பாதுகாக்க வேண்டும்... அவர் எல்லாருக்கும்தான் முதல்வர். அறநிலையத்துறை கோவில்களில் கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்... திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை... எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என தெரிவித்திருந்தேன்.. மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்" என்றார்.

    English summary
    Victory celebration in madurai and adheenam says that the central gov would definitely provide security மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X