அரசியலில் இது சாதாரண விஷயம்.. திமுக அரசை பாராட்டிய விஜயகாந்த் மகன்.. கையோடு சொன்ன தகவல்
மதுரை: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் , தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் பாராட்டி உள்ளார்.
Recommended Video
அரசியலில் வெற்றி தோல்வி என்பது அரசியலில் சாதாரண விஷயம் என்றும் அனைத்து கட்சிகளுக்கும் சகஜம் என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேமுதிக தொய்வாக உள்ளது தவறு என்றும் விஜயபிரபாகரன் விளக்கமும் அளித்தார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் , தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் இன்று மதுரைக்கு வருகை தந்தார். மதுரையில் உள்ள தேமுதிக உயர்நிலைக்குழு உறுப்பினர் பாலன் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார்

நல்ல உடல்நலம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபிரபாகரன் பேசுகையில், விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே துபாய் சென்றுள்ளார். கொரோனா காலம் என்பதால் விசா நடைமுறைகளால் கொஞ்சம் தாமதம் ஆனது. விஜயகாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.

மாணவர்கள்
பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கிறீர்கள், நிச்சயம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஏனெனில் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டார்கள். கொரோனா என்பது புதிய வைரஸ் என்பதை அதை கையாள்வதற்காக பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கலாம். ஆனால் பெற்றோர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பள்ளிகள் திறந்துவிட்டது என்பதற்காக மொத்தமாக ஜாலியாக பாதுகாப்பு நடைமுறைகளை கைவிடக்கூடாது.

அரசியலில் சகஜம்
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் (விஜயகாந்த்) வந்தவுடன் அறிவிப்பார். அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம் . கடந்த ஆட்சியின் போது அதிமுகவில் பெரிதாக பேசப்பட்ட சிலர் இப்போது என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அதேபோல் திமுகவில் பலர் பிரபலமாக இப்போது பேசப்படுகிறார்கள். எனவே அரசியலில் வெற்றிதோல்வி என்பது வரும் போகும். அரசியலில் இது சாதாரண விஷயம் .

திமுக ஆட்சிக்கு பாராட்டு
முன்பை விட தோல்வியிடத்தில் உள்ளோம் என்பதை உணர்ந்துள்ளோம். இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நிச்சயம் சரிசெய்வோம். தேமுதிக தொடங்கியதற்கான இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம். கொரோனா காலம் தொடங்கி இதுவரையில் திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. ஆறு மாதம் முடிந்த பின்னர் திமுக ஆட்சியை பற்றி சொல்வோம். திமுக அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சாதி அர்ச்சகர் அறிவிப்பை வரவேற்கிறோம்" இவ்வாறு கூறினார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications