மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்தெந்த தொகுதி கிடைக்கும்.. திமுகவுடன் நாளை பேசப் போகிறோம்.. அழகிரி தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவுடன் நாளை பேசப் போகிறோம்.. அழகிரி தகவல்

    மதுரை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என நாளை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வருவதை அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 10 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

    Will talk to DMK tomorrow for seats, says KS Algiri

    முன்னதாக கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது: மார்ச் 13 ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகத்தில் முதல் பிரச்சார கூட்டதில் பங்கேற்க உள்ளார். நாகர்கோவிலில் நடைபெறும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். எங்கள் கூட்டணி மத சார்பற்ற கூட்டணி. அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி.

    அதிமுக கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. பிரதமர், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதில்லை. ரபேல் சம்பந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போய் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால் தமிழகம் வளர்ச்சி பெறும்.

    இதுதான் பாமக தொகுதிகளா.. இவர்கள்தான் வேட்பாளர்களா.. பரபரப்பாக உலா வரும் பட்டியல்! இதுதான் பாமக தொகுதிகளா.. இவர்கள்தான் வேட்பாளர்களா.. பரபரப்பாக உலா வரும் பட்டியல்!

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை என்பது வளர்ச்சியை மையப்படுத்தி தாயர் செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எழுச்சியுடன் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகரித்து உள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டிகள் இல்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தேமுதிக திமுகவோடு வரவில்லை என்பது முடிந்து போன விசயம்.

    புல்வாமா தாக்குதல் குறித்து அமித்ஷா எப்படி சொல்ல முடியும். பாகிஸ்தானை தாக்குவது ஒன்றும் பெரிய விசயமில்லை. எடியூரப்பா கூறியது போல தாக்குதல் நடத்தியது தேர்தலை மையப்படுத்தி நடந்து உள்ளதா என நினைக்கிறேன். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடியின் செல்வாகு குறைந்து உள்ளது.

    காங்கிரஸ் - திமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. பாஜக - அதிமுக கூட்டணி பேரத்தின் ரீதியாக அமைந்துள்ள கூட்டணி. பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெறாது. அந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை காங்கிரஸ் - திமுக - மதிமுகவுக்கு கொள்கை மாறுபாட்டு இருக்கலாம். ஆனால் மதசார்பற்ற நிலைப்பாடு என்பது வரும்போது நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்" என தெரிவித்தார்.

    English summary
    TNCC president KS Alagiri has said that his party will talk to DMK team tomorrow to fix the seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X