• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

காமமா.. பாசமா.. கணவன், குழந்தையை மறந்து.. "திருநம்பி"யுடன் தனிக்குடித்தனம் நடத்தி வரும் சுகன்யா

|

மதுரை: இது காதலா, ஈர்ப்பா, நெருக்கமா, பாசமா, காம உணர்வா.. எதுவென்று சொல்ல தெரியவில்லை. கட்டிய கணவன் கால் ஊனமாகி முடங்கி உள்ளதையும் மறந்து, 6 வயது பெண் குழந்தையையும் மனைவி ஒருவர், "திருநம்பி"யாகிவிட்ட பள்ளி தோழியுடன் குடும்பம் நடத்தி வருவது அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, ஆனையூரைச் சேர்ந்தவர், சுகன்யா. இவருக்கு வயது 27. 2007ல், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் இவர் 10ம் வகுப்பு படித்தார். இவருடன் படித்தவர்தான் எப்சிபா.

நெருக்கம் என்றால் அப்படி ஒரு நெருக்கம். உயிர் தோழிகள்.. இவர்கள் 2 பேரும் ஜோடியாக சுற்றுவது பள்ளியில் அவ்வளவு ஃபேமஸ்.. ஆனால் எப்ஸி பெண்ணாக இருந்த போதிலும் நாளடைவில் பாலின மாறுபாடு காரணமாக, ஆணாக மாற தொடங்கினார்.

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

எப்ஸிபாவின் நடவடிக்கையை கவனித்த சுகன்யாவின் பெற்றோர், கண்டித்துள்ளனர். எப்ஸியுடன் சேர விடாமல் அறிவுறுத்தினர். நாளடைவில் சுகன்யா வளர்ந்ததும், ராமநாதபுரம், சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள். கல்யாணம் 2012-ல் நடந்தது. இப்போது 6 வயதில் இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் கணவர் ராஜேஷ், விபத்தில் சிக்கி, நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார்.

ஆபரேஷன்

ஆபரேஷன்

சில மாதங்களுக்கு முன் மதுரையில் தன் சொந்தக்காரர் வீட்டு திருமணத்துக்கு வந்திருந்தார் சுகன்யா. தன் குழந்தையை தம்பியின் வீட்டில் விட்டுவிட்டு தனியாகத்தான் கல்யாணத்துக்கு வந்தார். அங்கே எப்ஸிபாவை மீண்டும் சந்தித்தார். இவர் ஆபரேஷன் செய்து திருநங்கையாக மாறி விட்டதாக தெரிகிறது. பெயரைகூட, கெய்சன் ஜோஸ்வா என மாற்றி வைத்துக் கொண்டுள்ளாராம்.

எப்ஸிபா

எப்ஸிபா

ரொம்ப நாள் கழித்து பார்த்ததால், நீண்ட நேரம் மனம் விட்டு பேசினார்கள், செல்போன் நம்பர்களை ஒருத்தருக்கொருத்தர் வாங்கி கொண்டு பேச ஆரம்பித்தனர். அப்போதுதான் கணவர் நடக்க முடியாமல் வீட்டில் முடங்கிய விஷயம் எப்ஸிக்கு தெரியவந்துள்ளது. அப்போது எப்ஸியோ, "நான் இருக்கேன்.. நீ எதுக்கும் கவலைப்படாதே.. என்கூட வந்துடு.. புதுசா ஒரு வாழ்க்கையை தொடங்கலாம்" என்று சொல்லி உள்ளார்.

மயங்கினார்

மயங்கினார்

ஏற்கனவே, கண்ணீர், கவலையில் இருந்த சுகன்யாவோ, இந்த ஆறுதல் பேச்சில் மயங்கியதுடன், "இப்பவே நான் உன் கூட வந்துடறேன், என்னை கூட்டிட்டு போ" என்று கேட்டுள்ளார். உடனே எப்ஸிபாவும் சுகன்யாவை அழைத்து கொண்டார். மதுரையிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, இருவரும் அங்கேயே ஆளுக்கு ஒரு வேலையை தேடி கொண்டனர். இந்த விஷயம் சுகன்யா வீட்டுக்கு தெரிந்துவிட்டது. 6 வயது பெண் குழந்தையை பற்றி நினைக்காமல் ஒரு தாய் இப்படி செய்யவும், கோபமானார்கள்.

குழந்தை

குழந்தை

அதனால் குழந்தைக்காக திரும்பி வந்துவிடும்படி சொன்னார்கள். ஆனால் சுகன்யாவோ வரவே இல்லை. அதற்கு பதிலாக தன் 6 வயது குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஆபீசில் சுகன்யா புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசாரும் சுகன்யாவிடம் நேற்று பேச்சுவாரத்தை நடத்தினர். ஆனால் எப்ஸிபாவை விட்டு வர மறுத்துவிட்டார் சுகன்யா. முறையற்ற வாழ்க்கையை இவர் வாழ்வதால், நேரடியாக கோர்ட்டின் மூலம் வந்து குழந்தையை பெற்று கொள்ளுமாறு சொல்லி, சுகன்யாவை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர் போலீசார்!

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
Married Woman living together with Transgender in Madurai. She has filed a complaint to demanding the handover of her 6 year old daughter in Ramnad SP Office
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more