அடேங்கப்பா!! 1 கிலோ டீத்தூள் இவ்வளவு ரூபாயா?.. விலையை கேட்டீங்கனா மயக்கம் போட்டு விழுந்துடுவீங்க
கவுகாத்தி: மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய அங்கம் வகிப்பது டீ. ஒரு சிலர் அல்ல வெகு சிலருக்கே காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாள் புத்துணர்ச்சியாக அமையவில்லை என்று கூறுவது உண்டு.
வேறு சிலர் காலை உணவு அல்லது மதிய உணவு அல்லது இரவு உணவை தவிர்த்தாலும் கூட டீயை தவிர்க்க முடியாது. இவ்வாறு மனிதர்களின் வாழ்வில் ஒன்றோடு கலந்து விட்ட டீயை சிறப்பிக்க 'தேநீர் நாள்' என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தேயிலையின் வகை
தேநீரின் தரம் என்பது தேயிலையின் வகையை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது விலைகேற்ப தேயிலையின் தரம் என்பது மாறுபடும். நாட்டில் பல வகையான தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் தரத்துக்கு ஏற்ப விலையை தீர்மானிக்கின்றன. இந்த வகையில் ஒரு தேயிலை உற்பத்தி நிறுவனத்தின் தேயிலை 1 கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்பனையாகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீற்களா? நம்பித்தான் ஆகணும். வாங்க இதுபற்றிய முழு விவரத்தை பார்க்கலாம்.

தேயிலைக்கு பெயர் போன மாநிலம்
இந்தியாவில் அசாம் மாநிலம் என்பது தேயிலைக்கு பெயர் போனதாகும். இங்கு அதிகளவு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த வகையில் அசாமில் 'மனோஹரி தங்கம்' என்ற தேயிலை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தேயிலையின் நறுமணம், சுவைக்காக இதற்கு வரவேற்பு அதிகம். இந்த நிலையில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில், 'மனோஹரி தங்கம்' தேயிலை 1 கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்டது அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

1 கிலோ ரூ.1 லட்சம்
கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் பல்வேறு தேயிலை நிறுவனத்தின் தேயிலை தரத்துக்கேற்ப ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த ஏல மையத்தில்தான் 'மனோஹரி தங்கம்' தேயிலை 1 கிலோ ரூ.1 லட்சத்துக்கு ஏலம் போகியுள்ளது. இது தொடர்பாக வடகிழக்கு தேயிலை சங்கத்தின் ஆலோசகர் பித்யானந்தா பர்ககோடி மனோஹரி கூறுகையில், 'மனோஹரி தங்கம் மிகவும் சிறப்பான தேநீர். ஒயிட் டீ, க்ரீன் டீ, யெல்லோ டீ என விதவிதமான டீ தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்' என்று கூறியுள்ளார்.

இது முதன் முறை அல்ல
'மனோஹரி தங்கம்' தேயிலை அதிகபட்சமாக ஏலம் போவது இது முதன் முறை அல்ல. 2018-ம் ஆண்டில் மனோஹரி கோல்ட் தேயிலை வரலாற்றில் முதல் முறையாக 1 கிலோ ரூ. 39,001 க்கு விற்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் அதே சாதனையை முறியடித்து 1 கிலோ ரூ.50,000 க்கு விற்கப்பட்டது. கடந்த ஆண்டு கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் 1 கிலோ ரூ.75,000-க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது அதனையும் முறியடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications