கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவர்கள் அரசு & வேறு பள்ளிகளுக்கு மாற்றம்! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியமூர் சக்தி பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் அரசு மற்றும் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழகம முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பள்ளி சூறையாடப்பட்டதோடு, பள்ளி பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக விடிய விடிய நடந்த சோதனையில் நூற்றுக்கணக்கானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் ஆய்வு
இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே கலவரம் நடந்த கனியாமூர் தனியார் பள்ளியில் அமைச்சர்கள் வேலு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேன், உதயசூரியன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில் சக்தி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் அரசு மற்றும் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதாரத்தைப் பார்க்கும்போது, அங்கு இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது.

பாதிக்கப்படக்கூடாது
அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதிப்பதற்காக சின்னசேலம் அருகில் இருக்கும் முதன்மைக் கல்வி அலுவலரிடம், அருகில் இருக்கும் அரசுப்பள்ளிகள் என்னென்ன உள்ளதென்று பார்க்கமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
Recommended Video

எதிர்க்கட்சிகள் அரசியல்
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாணவியின் மரண விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியானது அல்ல தற்போது மாணவியை இழந்து தவிக்கும் அவரது பெற்றோரின் உணர்வுகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications