கூண்டோடு அணி மாறிய நிர்வாகிகள்: உத்தவ் தாக்கரேவுக்கு கடும் அதிர்ச்சி.. ஏக்நாத் ஷிண்டே 'ஹேப்பி'
மும்பை: சிவசேனா கட்சி தங்களுக்கு தான் சொந்தம் என்று உத்தவ் தாக்கரேவும், ஏக்னாத் ஷிண்டேவும் போட்டிப்போட்டுகொண்டு இருக்கும் நிலையில், உத்தவ் தாக்கரே அணியில் இருந்து 12 மாநில நிர்வாகிகள் ஏக்னாத் ஷிண்டே அணிக்கு மாறியுள்ளது உத்தவ் தாக்கரேக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், தேவேந்திர பட்னாவிஸ் தலமையிலான பாஜனதாவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.
ஆனால் முதல்வர் பதவி பிரச்சினையில் பாஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அதிரடியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார்.

இரண்டாக பிரிந்த சிவசேனா
மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் 2 ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்து வந்த நிலையில், திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார். தொடர்ந்து சிவசேனா அதிருப்தி அணியாக உருவாகிய ஏக்னாத் ஷிண்டே பாஜனதாவுடன் கூட்டணி வைத்து மமாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றார். இதனால் சிவசேனா அணி இரண்டாக பிரிந்தது.

மாநிலம் முழுவதும்
இதையடுத்து இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கோரி வருகிறது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்தநிலையில் உடைபட்ட சிவசேனாவை சீரமைக்க முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே போராடி வருகிறார். இது தொடர்பாக கட்சித்தொண்டர்களை சந்தித்து நியாயம் கேட்பதாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த நிர்வாகிகள் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். ஆதித்ய தாக்கரேவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஏக்நாத் ஷிண்டே அணியினரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

கூண்டோடு அணி தாவல்
இப்படி மகாராஷ்டிரா அரசியல் பரபரத்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், இதுநாள் வரை உத்தவ் தாக்கரே அணியில் இருந்து வந்த சிவசேனா கட்சியின் 12 மாநில பிரிவுகளின் தலைவர்கள் இன்று கூண்டோடு ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

12 பேர் யார்
சிவசேனா கட்சியின் டெல்லி மாநில தலைவர் சந்தீப் சவுத்ரி, மணிப்பூர் தலைவர் தோம்பி சிங், மத்திய பிரதேச தலைவர் தடேஷ்வர் மகவார், சத்தீஷ்கர் தலைவர் தனஞ்சய் பரிஹார், குஜராத் தலைவர் எஸ்.ஆர் பட்டீல், ராஜஸ்தான் தலைவர் லகான் சிங் பவார், ஐதராபாத் தலைவர் மவுரு அன்னா, கோவா தலைவர் கமத், கர்நாடகா தலைவர் ஏ ஹகேரி, மே.வங்காள தலைவ ஷந்தி தத்தா, ஒடிசா தலைவர் ஜோதிஸ்ரீ பிரசன்ன குமார், திரிபுரா முதல்வர் பரிவதேவ் நாத் ஆகிய 12 மாநிலங்களின் சிவசே தலைவர்களும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உத்தவுக்கு கடும் பின்னடைவு
கட்சியும் சின்னமும் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் இப்போதைக்கு முடிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில், 12 மாநில நிர்வாகிகள் கூண்டோடு அணி மாறியது உத்தவ் தாக்கரேவுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications