மும்பையில் ஷாக்.. காதலன் செய்த துரோகம்.. 9 மாதங்கள்.. 29 பேரால் சீரழிக்கப்பட்ட 15 வயது சிறுமி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமியும், இளைஞர் ஒருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளைடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த இளைஞர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இதனை தொடர்ந்து அந்த இளைஞர் சிறுமியை நாசமாக்கிய வீடியோவை தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளார். சிலரது செல்போனுக்கு வீடியோவை பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் இளைஞரின் நண்பர்களும் இந்த வீடியோவை காண்பித்து மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆரம்பித்தனர். மேலும் சிலருக்கு வீடியோ பரவ அவர்களும் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

9 மாதங்கள்

9 மாதங்கள்

டோம்பிவிலி, பத்லாபூர், முர்பாத் மற்றும் ரபாலே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுமியை கூட்டிச்சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களில் 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 29 பேர் சிறுமியை சீரழித்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்ததால் ஒன்பது மாதங்கள் இந்த கொடுமையை அனுபவித்த சிறுமி தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

26 பேர் கைது

26 பேர் கைது

இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்ட ஒரு சில குற்றவாளிகளுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு இருக்கிறது என்றும் மும்பை கிழக்கு பகுதி கூடுதல் போலீஸ் கமிஷனர் தத்தாத்ரே கராலே தெரிவித்தார். கைதானவர்கள் மீது பாலியல் பலாத்காரம், மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம், பதினாறு வயதிற்குட்பட்ட பெண் மீதான பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 கடுமையான தண்டனை வேண்டும்

கடுமையான தண்டனை வேண்டும்

இந்த கொடூர வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடுமையான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியை சீரழித்த கும்பலுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+