"காதலனை" நம்பி தனியாக சென்ற சிறுமி.. 8 கயவர்களால் கூட்டு பலாத்காரம்.. 12 மணி நேரம் நேர்ந்த கொடூரம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் 8 கயவர்களால் 12 மணி நேரம் தொடர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வந்த 16 வயது சிறுமிக்கும் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த இளைஞருக்கும் நீண்ட நாட்கள் நட்பு இருந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் அடிக்கடி தனியாக சந்தித்து பேசிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமி தன்னுடைய தோழிகளிடத்தில் கூறி இருக்கிறார்.

வெளியே போகலாம்..
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை எங்காவது வெளியே போகலாம் என்று அந்த இளைஞன் கேட்டுள்ளார். இதற்கு அந்த சிறுமியும் ஒப்புக்கொள்ள இருவரும் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். பின்னர் அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்திற்கு போகலாம் என அந்த இளைஞன் அழைத்துள்ளார். முதலில் சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர் அந்த இளைஞன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே சிறுமி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அங்கு இந்த இளைஞரின் நண்பர்கள் இருப்பது சிறுமிக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே கட்டிடத்திற்குள் சென்றவுடன் சிறுமியை 7 பேர் சூழ்ந்துகொண்டு கட்டிடத்தின் முதல் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அது ஆள் ஆரவமற்ற இடம் என்பதால் சிறுமியின் கூச்சல் சத்தம் யார் காதுக்கும் விழவில்லை.

கூட்டு பாலியல் பலாத்காரம்
இதனையடுத்து சிறுமியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளனர். ஆனால் சிறுமி அதற்று இணங்காததால் அந்த கயவர்கள் சிறுமியை பலமாக தாக்கியுள்ளனர். இதில் சிறுமியின் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி எவ்வளவு கெஞ்சியும் அவளை அவர்கள் விடவில்லை. நான்கு மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து வெளியே அனுப்பி விடுவதாக கூறி கடற்கரைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அதற்குள் நள்ளிரவு ஆகிவிட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்குள்ள புதரில் வைத்து சிறுமியை மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிக்கல்
சிறுமி அங்கேயே மயங்கிய நிலையில் அங்கிருந்து மீண்டும் ஆளில்லாத கட்டிடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை காலை 8 மணி வரையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மொத்தமாக 12 மணி நேரம் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு சிறுமி உள்ளாக்கப்பட்ட நிலையில், காலை 11 மணியளவில் அந்த கும்பல் சிறுமியை விட்டுவிட்டு சென்றுவிட்டிருக்கிறது. பின்னர் நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து தப்பிய சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். ஆனால் சிறுமியின் காதலன் தலைமறைவாகிவிட்டதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விசாரணை
பின்னர் தொடர் தேடுதலுக்கு பிறகு குற்றவாளிகள் 8 பேர் ஒவ்வொருவராக பிடிபட்டனர். இவர்கள் மீது போக்சோ, இந்திய தண்டனை சட்டம் 376 (D), 366 (A), 341, 342, 323 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதலனை நம்பி தனியாக சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications