Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த விவகாரம் .. ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பா? மும்பை போலீஸ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மும்பை : ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. அது தொடர்பாக சில சாட்சியங்கள் கிடைத்ததால் மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவை அதிரடியாக கைது செய்தார்கள். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. பிரபல தொழில் அதிபர் ஆவார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஷில்பா ஷெட்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராஜ்குந்ரா ஆபாசப் படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக நேற்று மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை மும்பை போலீஸ் கமிஷ்னர் ஹேமந்த் உறுதி செய்தார். இது குறித்து கமிஷ்னர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது,

வழக்கு

வழக்கு

தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கின் முக்கிய சதிகாரராக செயல்பட்ட ராஜ்குந்த்ராவை கைது செய்துள்ளோம். இவ்வழக்கில் அவருக்கு எதிரான போதுமான சான்றுகள் உள்ளன. பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆபாச படங்களை எடுப்பதற்காக நடிகர்களை கட்டாயப்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் காவல்

போலீஸ் காவல்

மேற்கண்ட இரு எப்ஐஆர் அடிப்படையில் கடந்த வாரம் ஒன்பது பேரை கைது செய்தோம். இவர்கள் வெளியிட்ட ஆபாச படங்களை கட்டண மொபைல் செயலிகளில் வெளியிடப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராஜ் குந்த்ராவை நீதிமன்றத்தில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை ஜூலை 23 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் செய்தியாளர்களிடம் பேசும் போது, "ஆபாசப்படம் தயாரிப்பு வழக்கில் ராஜ்குந்த்ராவை கைது செய்துள்ளோம். ராஜ்குந்தராவின் மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறோம். ராஜ்குந்த்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே முன் வந்து புகார் கூறனலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார்கள்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா மீது, மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது மற்றும் ஆபாச புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராஜ்குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவுக்கு நேற்று அழைத்து சென்ற போலீசார் அங்கு வைத்து விசாரித்து வருகிறார்கள்.

சகாரிகா சுமன் வீடியோ

சகாரிகா சுமன் வீடியோ

ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சகாரிகா சுமன் ஒரு முறை பேட்டி கொடுத்திருந்தார். இந்த வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. இதனிடையே ராஜ்குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பூனம் பாண்டே தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+