"யாரும் தேவையில்லை! நான் என்னோட காரையே தரேன்! தாராளமா பாஜகவுக்கு போங்க!" சர்ச்சையை கிளப்பிய கமல்நாத்

Subscribe to Oneindia Tamil

மும்பை: காங்கிரஸ் கட்சி மிகவும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. 2014க்கு பிறகு அக்கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அங்கிருந்து மூத்த தலைவர்கள் பலரும் விலகி வருகின்றனர்.

இப்படி விலகும் பெரும்பாலான தலைவர்கள் டெல்லி தலைமையின் மீதே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அப்படி சமீபத்தில் குற்றஞ்சாட்டி விலகியவர் தான் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

 மூத்த தலைவர்கள்

மூத்த தலைவர்கள்

ராகுல் காந்தியின் செயல்பாடுகள் காரணமாகவே காங்கிரஸில் இருந்து விலகியதாகக் குறிப்பிட்ட குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் அறிவித்தார். காஷ்மீரில் முதலில் இந்த புதிய கட்சியைத் தொடங்கும் குலாம் நபி ஆசாத், பின்னர் இதை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இப்படி தொடர்ச்சியாகத் தலைவர்கள் விலகுவது காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது.

கமல்நாத்

கமல்நாத்

இந்தச் சூழலில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகுவது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது காங்கிரஸில் இருந்து வெளியேறும் யாரையும் தடுக்க மாட்டோம் என்றும் யாராவது பாஜகவில் சேர விரும்பினால், தனது காரைக் கடனாகத் தருவதாகவும் கூறினார். கோவாவில் இருந்து காங்கிரஸின் 11 எம்எல்ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு மாறிய நிலையில், கமல்நாத் இப்படியொரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 பாஜகவுக்கு போகலாம்

பாஜகவுக்கு போகலாம்

மேலும் அவர் கூறுகையில், "காங்கிரஸ் முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களா? சிலர் பாஜகவில் சென்று ஐக்கியமாவதாகச் சொல்கிறீர்கள். பாஜகவுக்குச் செல்ல விரும்பினால் போய் சேரலாம். நாங்கள் யாரையும் தடுக்க விரும்பவில்லை. "அவர்கள் (காங்கிரஸ் நிர்வாகிகள்) தங்கள் கொள்கைக்கு பாஜகவில் எதிர்காலம் இருக்கும் என்று நினைத்தால் தாராளமாக அங்குச் சென்று சேரலாம்

அவசியமில்லை

அவசியமில்லை

அவர்களுக்கு நான் எனது காரை கொடுத்து உதவவும் தயாராக இருக்கிறேன். யாரையும் சமாதானப்படுத்தி கட்சியில் தொடர வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படிப்பட்டவர்கள் கட்சியில் இருக்க வேண்டும் எனத் தேவையில்லை. கட்சியில் இருக்க வேண்டும் என யாருக்கும் எந்த அழுத்தமும் இல்லை. காங்கிரஸில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். கட்சியில் இருந்து அவர்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியில் இருந்து வரிசையாகப் பல மூத்த தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி இப்போது பாத யாத்திரை தொடங்கி உள்ளார். மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் ந்த பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி இந்த பாத யாத்திரை காஷ்மீரில் நிறைவடைகிறது. இப்போது ராகுல் காந்தி கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+