மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சஞ்சய் ராவத்- காவலில் எடுக்க அமலாக்கத்துறை திட்டம்
மும்பை: குடிசை மாற்று வாரிய திட்டத்தில் பணமோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனி அணியாக சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் முதல்வராக பதவியேற்று 3 ஆண்டுகள் கூட நிறைவடையாமல் உத்தவ் தாக்கரே பதவியில் இருந்து விலகினார்.

சிவசேனாவில் பிளவு
சிவசேனா கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கூறி வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் இரு தரப்பும் முறையிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவ்வாறாக மராட்டிய அரசியலில் தினம் தினம் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்ற சூழல் நிலவி வரும் நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளராகவும் உள்ள எம்.பி சஞ்சய் ராவத்திற்கு எதிராக குடிசை சீரமைப்பு திட்டத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஆஜராகவில்லை
இது தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறையின நோட்டீஸ் அனுப்பி வந்தனர். ஆனால் சஞ்சய் ராவத் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் தன்னை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து வெளியேற்ற பாஜனதாவினர் முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் உண்மையான சிவசேனா அணியினர். செத்தாலும் இதிலிருந்து பிரிய மாட்டேன் என்று கூறி வந்தார். இதன் காரணமாக இரண்டு முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தும் சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

10 மணி நேர சோதனை
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று சஞ்சய் ராவத் வீடு மற்றும் மும்பையில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர், மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில், காலை 7 மணியளவில் மும்பை பாண்டுப்பில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது சஞ்சய் ராவத் வீட்டில் இருந்தார். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு மாலை 5 மணியளவில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக சஞ்சய் ராவத்தை வீட்டில் இருந்து மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நள்ளிரவில் சஞ்செய் ராவத் கைது செய்யப்பட்டார்.இதில் அவரது வீட்டில் 11 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

பலத்த பாதுகாப்பு
இந்த நிலையில், மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். சஞ்சய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்தில் கோர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு சஞ்சய் ராவத் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் எனத்தெரிகிறது. சஞ்சய் ராவத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவசேனா தொண்டர்கள் அங்கு குவியக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications