கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் உலகம்.. ஒரே நாளில் 8,71,158 பேர் குணமடைந்தனர்
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,47,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 8,71,158 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. உலக மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றனர். ஒரே நாளில் 8,71,158 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 4,47,272 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் மொத்தம் 56,82,18,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 53,96,07,874 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,89,066 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 39,126 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 57 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 4,47,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,82,18,557 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 8,71,158 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 53,96,07,874 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் மரணம்
கொரோனாவால் உலகம் முழுவதும் 987 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63,89,066 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 54,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,14,10,171 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,49,239 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் தொடரும் பாதிப்பு
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 38,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3,33,39,815 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் மொத்தம் 6,75,551 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

தடுப்பூசி அவசியம்
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனினும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. கொரோனா எப்போது ஒழியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications