மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக மக்களை மிரள வைக்கும் கொரோனா.. 56 கோடி மக்கள் பாதிப்பு - 53 கோடி பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,03,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 56,51,65,177 கோடி பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 56,51,65,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 53,67,78,794 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,81,884 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 38,908 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 54 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள்- தேனி மாவட்டத்தில் பரபர!ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள்- தேனி மாவட்டத்தில் பரபர!

உலகம் முழுவதும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 8,03,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,51,65,177 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 5,27,555 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 53,67,78,794 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள்

கொரோனாவால் உலகம் முழுவதும் 1,364 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63,30,785 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 94,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,10,58,720 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,48,231பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 1,19,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,27,95,874 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150,468 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

ஓமிக்ரான் வைரஸ்

ஓமிக்ரான் வைரஸ்

ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

English summary
Corona affects 56 crore people worldwide - 53 crore people recovered Corona update world wide: (உலக அளவில் கொரோனா பாதிப்பு அப்டேட்) 56,51,65,177 people have been affected by Corona around the world. 53,67,78,794 people around the world have recovered from Corona. 63,81,884 people have died worldwide due to Corona. Worldwide, 38,908 people are critically ill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X