மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... அமெரிக்கா, சீனா நாடுகள் அச்சம் - 4 வது அலை தாக்குமா?

உலகம் முழுவதும் கொரோனாவால் 51,90,04,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 47,37,97,022 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,82,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 51,90,04,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 47,37,97,022 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,82,062 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 39,314 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Corona world update: 51,90,04,702 people affect 47,37,97,022 recovered in world

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு 'ஜீரோ கோவிட்' கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது. ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் இதன் நோக்கம் ஆகும். இதற்காக கடுமையான ஊரடங்குகள், பொது முடக்கங்கள் ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அமலில் உள்ளது.

ஹாங்சோ நகரில் செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கைக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் 1,847 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலானோர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 5,71,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51,90,04,702 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 5,48,863 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 47,37,97,022 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 1,492 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,82,062 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 87,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,39,53,371 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,25,764 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா யுடர்ன்...சீனாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடு... விரக்தியில் மக்கள் - 4வது அலை தாக்குமா கொரோனா யுடர்ன்...சீனாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடு... விரக்தியில் மக்கள் - 4வது அலை தாக்குமா

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. 2,275 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,31,12,861 பேராக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 40,299பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 93,102 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 43,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டில் 42,249 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

English summary
Corona update world wide: (உலக அளவில் கொரோனா பாதிப்பு அப்டேட்) Worldwide, 51,90,04,702 people are affected by corona. 47,37,97,022 people have recovered from corona damage. Corona has killed 62,82,062 people worldwide. Around the world, 39,314 people are being treated for anxiety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X