தலைமுடியை பிடித்து இழுத்து.. தரையில் தள்ளி.. உதைத்து... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை.. பகீர் வீடியோ
மும்பை: மகாராஷ்டிராவில் கர்ப்பிணி வன ஊழியரின் முடியை பிடித்து , தரையில் இழுத்துப் போட்டு அடித்துக் கொடுமைப்படுத்திய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். இதுபற்றிய விவரம் பின்வருமாறு காணப்போம்.
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் வனத்துறையில் பணிபுரிந்து வரும் பெண் வனக்காப்பாளர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கணவரும் வனத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தலைமுடியைப் பிடித்து..
இந்த வனசரகத்தின் முன்னாள் சர்பஞ்ச் ராம்சந்திர கங்காராம் ஜங்கர் உள்ளூர் வனக் குழுவில் உள்ளார். இந்த நிலையில் முன்னாள் சர்பஞ்ச் ராம்சந்திர கங்காராம் மற்றும் அவரது மனைவி பிரதிபா ஜங்கர் ஆகியோர் கர்ப்பிணியான பெண் வனக்காப்பாளரை தலைமுடியைப் பிடித்து தரையில் தள்ளி, அவரை கடுமையாக உதைத்துள்ளனர்.

எவ்வளவு கொடுமைகள்
பெண் வனக்காவலரையும், அவரது கணவரையும் செருப்பால் அடித்து இந்த தம்பதியினர் கொடுமை செய்துள்ளனர். கர்ப்பிணி என்றும் பாராமல் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் முன்னாள் சர்பஞ்ச் ராம்சந்திர கங்காராம் மற்றும் அவரது மனைவி செய்த கொடுமைகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் பெண் ரேஞ்சரின் தலைமுடியைப் பிடித்தபடி முன்னாள் சர்பஞ்சின் மனைவி சண்டை போடும் காட்சிகள் மிகவும் கொடுமையாக உள்ளது.

நெட்டிசன்கள் கண்டனம்
வன்சரகத்தின் பெண் தொழிலாளர்களை பெண் வனக் காவலர் வேறு தளத்தில் வேலைக்கு அமர்த்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் சர்பஞ்ச் ராம்சந்திர கங்காராம் அவருக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதன்பின்புதான் கணவன்-மனைவியும் சேர்ந்து கர்ப்பிணியை கொடுமைபடுத்தி உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்பதி கைது
முன்னாள் சர்பஞ்ச் ராம்சந்திர கங்காராம் மற்றும் அவரது மனைவி பிரதிபா ஜங்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். தானாக முன்வந்து காயப்படுத்துதல், கிரிமினல் மிரட்டல், அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துதல் மற்றும் ஒரு பெண்ணைத் தாக்குதல் போன்ற புகார்களில் தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications