மும்பையில் உள்ளவருக்கு XE வகை கொரோனா பாதிப்பா? அதெல்லாம் இல்லை.. ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு விளக்கம்
இந்தியாவில் முதல்முறையாக XE ஓமிக்ரான் மும்பையில் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது
மும்பை: மும்பையில் ஓமிக்ரான் எக்ஸ் இ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கி இருப்பதாக இன்று செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தியாவின் ஜீனோம் கூட்டமைப்பு இதை மறுத்துள்ளது. ஓமிக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ (XE) எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, பத்து சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக எக்ஸ் இ வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் இந்த வைரஸ் பாதிப்புகள் இதுவரை 600க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
ஓமிக்ரானின் பிஏ.1 துணை மாறுபாடு கொரோனாவின் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது. எக்ஸ் இ தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ் இ எனும் புதிய மாறுபாடு, ஓமிக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ 2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் புதிய வேரியண்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய வைரஸ்
எக்ஸ் இ என்பது ஓமிக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. புதிய எக்ஸ் இ வைரஸானது ஓமிக்ரானின் பிஏ.2 பிறழ்வைவிட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது எனவும், பிஏ.2 உடன் ஒப்பிடும்போது அதன் சமூகப் பரவல் 10% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

மிக தீவிரமான வைரஸ்
இப்போது வரை, ஓமிக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கோவிட்-19 இன் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது. எக்ஸ் இ தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கோவிட்-19 வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது, அமெரிக்காவிலும் பெரும்பாலான பிஏ.2 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில் நுழைந்த எக்ஸ் இ வைரஸ்
மும்பையில் ஓமிக்ரான் எக்ஸ் இ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கி இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால் இந்தியாவின் ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு இதை மறுத்துள்ளது. அந்த நபரின் கொரோனா மாதிரியை சோதனை செய்ததில் அதில் xe உருமாற்றம் ஏற்பட்டதற்கான புரோட்டின்கள் இல்லை என்று கூறியுள்ளது.ஆனால் மத்திய அரசு அதிகாரபூர்வ விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.ஓமிக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ (XE) எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, பத்து சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வேகமாக பரவும்
பிரிட்டனில் 600 க்கும் குறைவான பாதிப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது மக்களிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications