மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் தீயாய் பரவும் கொரோனா: லாக்டவுனுக்கு நிகரான கடும் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்றைக்கு இரவு 8 மணியிலிருந்து தொடங்கும் இந்த ஊரடங்கு மே மாதம் 1ஆம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு நேர ஊரடங்கில் அவசர கால அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கு தவிர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 67468 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரேநாளில் 168 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இரவு நேர லாக்டவுன் முதலில் அமல்படுத்தப்பட்டது.

வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. கொரோனாவால் மாநிலத்தின் நிலைமை மோசமாகி வருவதால் கட்டுப்பாடுகளுடன் முழு லாக்டவுன் விதிக்கும்படி அம்மாநில அமைச்சர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் அம்மாநிலத்தில் லாக்டவுன் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 வெரி குட் நியூஸ்.. தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா வருவது மிகக்குறைவாம்.. தரவுகளை நீங்களே பாருங்க! வெரி குட் நியூஸ்.. தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா வருவது மிகக்குறைவாம்.. தரவுகளை நீங்களே பாருங்க!

மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள்

மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள்

முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ஆனால் அதற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். புதிய வழிகாட்டுதல்கள்படி அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு உள்ளவர்கள், மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டுமே லோக்கல் மற்றும் மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தீயாய் பரவும் கொரோனா: லாக்டவுனுக்கு நிகரான கடும் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

15 சதவிகித ஊழியர்கள்

15 சதவிகித ஊழியர்கள்

அரசு அலுவலகங்கள் 15 சதவிகித ஆட்களுடன் செயல்படுவதற்கும், அரசு பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே அன்றி பிற நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம் என்று மகாராஷ்டிரா மாநில அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாதுகாப்பு நடவடிக்கைகள்

அரசு அலுவலர்கள் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வெளியே செல்லலாம் எனவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறு அம்மாநில முதல்வர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

திருமண விழாக்கள்

திருமண விழாக்கள்

திருமண விழாக்கள் மண்டபத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடக்கக்கூடாது என்றும், 25 நபர்களுக்கு மேல் விழாக்களில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் மே 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Maharashtra government reacted on Wednesday to the continuing surge in Covid-19 cases with additional restrictions on travel within the state and the city, and a further reduction in attendance in government offices and such private offices that fall under the essential or exempted category. These curbs will kick in at 8pm Thursday and be in force till 7am on May 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X