மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா?

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் ஆக்சிஜன் பெட், ரெம்டிசிவிர் ஊசி மருந்து தட்டுப்பாடு உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Doctors protest claiming there is a shortage of oxygen bed and remticivir injection in Maharashtra

அதாவது கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் ஒரு மாநிலத்தில் அதுவும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவாகும். மாநிலத்தின் மும்பை, புணே, நாக்பூர் என பல்வேறு முக்கிய நகரங்களில் கொரோனா தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு கொண்டு வர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அடேங்கப்பா.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,294 பேருக்கு கொரோனா.. முழு லாக்டவுன் கொண்டு வர முடிவு?அடேங்கப்பா.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,294 பேருக்கு கொரோனா.. முழு லாக்டவுன் கொண்டு வர முடிவு?

இதற்கிடையே மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஏராளாமான தடுப்பூசி மையங்கள் மூடிக் கிடக்கின்றன. மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கையும் நிரம்பி விட்டது. ஆக்ஜிசன் பெட் தட்டுப்பாடும் உள்ளது.

இந்த நிலையில் நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் ஆக்சிஜன் பெட், ரெம்டிசிவிர் ஊசி மருந்து தட்டுப்பாடு உள்ளது எனக்கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் இந்த சூழ்நிலையை ஒரு தேசிய அவசரநிலையாக கருத வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்தனர்.

English summary
Doctors at the Nagpur Government Medical College Hospital in Maharashtra have been embroiled in a struggle claiming there is a shortage of oxygen bed and remticivir injection
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X