மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொதல்ல இந்த ரெட்ஸோனை எடுங்கப்பா.. ஆண்களோட "தொல்லை" தாங்க முடியலை.. கதறும் பெண்கள்

ரெட் ஸோன்களில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

மும்பை: "முதல்ல இந்த ரெட் ஸோன்களை எடுத்து விடுங்க.. புண்ணியமாப் போகும்.. எங்களால் இந்த ஆண்களிடம் பட முடியலை" என்று பெண்கள் கதறுவது அதிகரித்துள்ளதாம். காரணம் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வீட்டுக் கொடுமைகள் கிடுகிடுவென அதிகரித்து விட்டதாம்.

உண்மைதான்.. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை நாடு முழுவதும் லாக்டவுன் பல்வேறு வகையாக இருந்து கொண்டுதான் உள்ளது.

பல பகுதிகளில் முழு டாக்டவுன் உள்ளது. பல இடங்களில் கட்டுப்பாட்டுடன் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்குமே லாக்டவுன் முழுமையாக தளர்த்தப்படவில்லை.

30 நொடியில் கண்டுபிடிக்கலாம்.. இந்தியாவிற்கு ஹைடெக் வல்லுநர்களை அனுப்பும் இஸ்ரேல்.. நெதன்யாகு அதிரடி30 நொடியில் கண்டுபிடிக்கலாம்.. இந்தியாவிற்கு ஹைடெக் வல்லுநர்களை அனுப்பும் இஸ்ரேல்.. நெதன்யாகு அதிரடி

உறவுகள்

உறவுகள்

ஆரம்பத்தில் லாக்டவுன் முழுமையாக இருந்தபோது வீட்டுக்குள்ளேயே அனைவரும் முடங்கும் நிலை ஏற்பட்டது. அப்போதுதான் இந்த வீட்டுக் கொடுமை அதிகரிக்க ஆரம்பித்தது. பெண்களுக்கு வீட்டு வேலை பல மடங்கு அதிகரித்தது. ஆண்கள் வீட்டோடு இருந்ததால் பெண்களுடனான உறவுகளும் கூட அதிகரித்தது. இதனால் மனதளவிலும், உடலளவிலும் பெண்கள் பல சங்கடங்களை, வலிகளை தாங்க நேரிட்டது.

ரெட் ஸோன்

ரெட் ஸோன்

இந்த நிலையில் தற்போது "ரெட் ஸோன்" மூலம் புதுப் பிரச்சினை வெடித்து வெளி வந்துள்ளதாம். அதாவது மார்ச் 2020 முதல் மே 2020 வரை ரெட் ஸோன் பகுதிகளில் வீட்டு வன்முறையின் அளவானது 2 மடங்கு அதிகரித்துள்ளதாம். வழக்கமாக இந்தப் பகுதிகளில் ரிப்போர்ட் ஆகும் புகார்களை விட தற்போது 2 மடங்கு புகார் அதிகரித்துள்ளதாம்.

புகார்

புகார்

பல இடங்களில் மனைவியை அடித்து உதைத்த கணவர்கள் மீதான புகார்கள்தான் அதிகம் வந்துள்ளது. வீட்டில் வழக்கமாக நடப்பதை விட அதிக சண்டைகள் நடந்துள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து லாக்டவுன் நீடித்து வருவதால், வன்முறைகளும் நீடிக்கும் அபாயம் உள்ளதாம். ஆனால் ஒரு சந்தோஷமாக பாலியல் பலாத்காரம் வெகுவாக குறைந்து விட்டதாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

இதுதொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதை நடத்தியவர்களான சரவணன் ரவீந்திரன் மற்றும் மனிஷா ஷா ஆகியோர் இதுகுறித்துக் கூறுகையில், இந்திய தேசிய மகளிர் ஆணையத்திடம் பெரிய அளவில் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. லாக்டவுன் அமலாக்கப்பட்டதற்குப் பிறகுதான் புகார்கள் அதிகரித்துள்ளன.

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

இந்த வருடம் மே மாதத்தில் மட்டும் 392 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ளன. இதுவே கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் 266 ஆக மட்டுமே இருந்தது. மே 2020ல் பெண்கள் தொடர்பான சைபர் கிரைம் புகார்களின் எண்ணிக்கை 73 ஆக இருந்தது. இதுவே 2019ல் வெறும் 49 மட்டுமே. பாலியல் தாக்குதல், பலாத்காரம் உள்ளிட்ட புகார்கள் நன்றாக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு மே மாதம் இது 163 ஆக இருந்தது. இந்த ஆண்டு மே மாதம் இது 54 ஆக குறைந்துள்ளது. இது ஆறுதல் தரும் செய்தியாகும்.

சிவப்பு மண்டலம்

சிவப்பு மண்டலம்

ரெட் ஸோன் பகுதிகளில் மார்ச் 2020ல் இருந்ததை விட மே மாதம் அதிக அளவிலான வீட்டு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பசுமை மண்டலங்களில் இந்த எண்ணிக்கையானது பெரிய அளவில் மாறவில்லை. சிவப்பு மண்டலங்களில்தான் எல்லாமே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேசமயம், பசுமை மண்டலங்களை விட ரெட் ஸோன்களில்தான் பாலியல் பலாத்காரம், பாலியல் கொடுமைகள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றன.

போக்குவரத்து

போக்குவரத்து

வழக்கமாக இந்த மண்டலங்களில் இருப்பதை விட மார்ச் மாதத்தில் இது .5 ஆக இருந்தது. ஏப்ரல் மாதம் மேலும் குறைந்து.1 ஆக மாறியது. ஆனால் மே மாதம் இது .2 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பசுமை மண்டலங்களில் இது .1 ஆக இருந்து பின்னர் .05 ஆக குறைந்து விட்டது. பொதுப் போக்குவரத்து இல்லாதது, இரவு நேரத்தில் நடமாட்டம் குறைந்து போனது, அலுவலகங்கள் இயங்காததால் பணியிடத்தில் நடக்கும் பாலியல் கொடுமைகள் தவிர்க்கப்பட்டது உள்ளிட்டவைதான் பாலியல் பலாத்கார சம்பவங்கள் வெகுவாக குறைய முக்கிய காரணம்.

English summary
Domestic violence reported more during lockdown in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X