மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னா ஸ்பீடு..!! ரயில் நிலையத்தில் மின்னல் வேகத்தில் பயணி உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை பைகுலா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.. மேலும் இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்குரிய பணி என பதிவிட்டு மத்திய ரயில்வே பெருமைப்படுத்தியுள்ளது.

Recommended Video

    என்னா ஸ்பீடு..!! ரயில் நிலையத்தில் மின்னல் வேகத்தில் பயணி உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்

    எப்போதுமே மிகவும் பரபரப்பாக காணப்படும் மும்பை பைகுலா ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண் காவலரான சப்னா கோல்கர் (Sapna Golkar) வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    Female RPF constable saves woman in Mumbai

    அப்போது ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் ரஷிதாகான் என்ற பயணி ஓடி ஏற முயன்றார். நிலைதடுமாறி கீழ விழுந்த அவர், ரயிலின் அடியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    பெண் கீழே விழுவதைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலரான சப்னா மின்னல் வேகத்தில் செயல்பட்டு, பயணி ரஷிதாவை தூக்கினார். நூலிழையில் ரஷிதா உயிர்தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும் இது பாராட்டுக்குரிய பணி என மத்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெண் காவலர் சப்னாவை பாராட்டியுள்ளது. மேலும் இணையவாசிகளும் அவரை வெகுவாகப் பாரட்டிவருகின்றனர்.

    English summary
    A female guard rescues a woman who fell while attempting to board a running train at Byculla railway station. Praise is heaped on the Railway Security Force female guard who saved the woman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X