நடுங்குதே கேட்டாலே.. குழந்தை பெற்ற 15 வயது சிறுமி.. திடீர்னு பெட்டிக்குள்ளேயிருந்து வந்த சத்தம்.. ஐயோ
சுயமாக பிரசவம் பார்த்து அதன் மூலம் பிறந்த குழந்தையை சிறுமி கொலை செய்துள்ளார்
மும்பை: மகாராஷ்டிராவில் 15 வயது சிறுமி ஒருவர் தனக்கு தானே சுய பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி இன்ஸ்டாகிரம் பயன்படுத்தி வந்துள்ளார். பள்ளி மாணவியான இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத ஒரு நபரிடமிருந்து ஃபாலோ ரெக்வஸ்ட் வந்திருக்கிறது. இவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் பின்னர் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த இளைஞநட்பார் தொடர்ந்து க பேசி வந்திருக்கிறார். பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் தான் காதலிப்பதாகவும் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சிறுமியும் சரியென ஒப்புக்கொள்ள இதுவரை செல்போன் மூலம் மட்டுமிருந்த பேச்சு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி நேரில் சென்று பேசும் அளவுக்கு வளர்ந்தது. இளைஞர் சிறுமியை அடிக்கடி நேரில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். சிறுமி இதற்கு மறுத்தபோது ஆசை வார்த்தைகள் கூறி ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

தனிமையில் சந்திப்பு
இந்த விவகாரம் தங்களது வீட்டிற்கு தெரியாமல் சிறுமி பார்த்துக்கொண்டுள்ளார். சிறுமியின் தாய் மற்றும் தந்தை இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால் அவர்களுடைய கண்காணிப்பில் சிக்காமல் சிறுமியால் தப்பித்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இதனையடுத்து இளைஞர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனை இருவரும் எதிர்பார்க்காத நிலையில், என்ன செய்வதென்று யோசித்துள்ளனர். நண்பர்களின் உதவியின் பேரில் என்னென்னமோ செய்து பார்த்துள்ளனர். ஆனால் எது செய்தாலும் அவர்களால் கருவை கலைக்க முடியவில்லை.

கர்ப்பம்
மறுபுறம் கரு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. வீட்டிலும் இப்பெண்ணை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் இந்த விஷயம் வெளியில் பெற்றோர்களுக்கு தெரியவில்லை. இதற்கிடையில் சிறுமி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று தனது உடல் நலம் குறித்து பரிசோதனை செய்து வந்திருக்கிறார். மேலும் வீட்டிலேயே எப்படி பிரசவம் பார்ப்பதென்பது குறித்தும் யூடியூபில் வீடியோ பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து குழந்தை பிறப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் வீட்டில் உள்ளவர்களும் வெளியில் சென்றுள்ளனர். இதுதான் சரியான நேரம் எனக்கருதி சுய பிரசவத்திற்கு தயாராகியுள்ளார்.

பிரசவம்
திட்டமிட்டபடியே எல்லாம் சரியாக சென்றுகொண்டிருக்க குழந்தை பிறப்பதற்கான அறிகுறியும் தெரிந்துள்ளது. மெல்ல மெல்ல வலி அதிகரிக்க குழந்தையும் பிறந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக குழந்தை அழ தொடங்கவே என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அக்குழந்தையின் சடலத்தை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறார். நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு திரும்பிய பெற்றோர் சிறுமி சோர்வாக இருந்தது குறித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் உண்மை வெளியில் தெரிய வந்துள்ளது.

வழக்குப்பதிவு
இதனையடுத்து காவல்துறையினருக்கு பெற்றோர் தகவல் தெரிவிக்க, அவர்கள் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர். மேலும் சிறுமியுடன் தொடர்பில் இருந்த இளைஞரையும் தேடி வருகின்றனர். சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கர்ப்பமாகி பின்னர் சுய பிரசவம் செய்து அக்குழந்தையையும் கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications