மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்ன சின்ன விஷயங்களில் கூட.. இப்படி செய்யலாமா ரோஹித் சர்மா.. ராஜினாமா பண்ணுங்க! பரபரப்பு பின்னணி!

Google Oneindia Tamil News

மும்பை: 2022 ஐபிஎல் தொடரில் மும்பை அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்தது மும்பை அணி ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டு வலுவான அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டும்தான். இந்த இரண்டு அணிகளும் சேர்த்து மொத்தமாக 9 கோப்பைகளை வென்றுள்ளது.

இந்த சீசனில் மோசமான தொடக்கம் கொடுத்த சிஎஸ்கே அணி 4 தோல்விகளுக்கு பின் ஒரு வழியாக கடந்த போட்டியில் வென்று கம்பேக் கொடுத்தது.

உடனே வாங்க! நாட்டில் இவ்ளோ பிரச்சினை இருக்க“ஐபிஎல்” முக்கியமா? இலங்கை வீரர்களை வறுத்தெடுத்த ரணதுங்க உடனே வாங்க! நாட்டில் இவ்ளோ பிரச்சினை இருக்க“ஐபிஎல்” முக்கியமா? இலங்கை வீரர்களை வறுத்தெடுத்த ரணதுங்க

மும்பை அணி

மும்பை அணி

ஆனால் மும்பை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சிஎஸ்கே அணிக்காவது நல்ல பாஸ்ட் பவுலர் இல்லை. 4 போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைய அணியின் மோசமான பவுலிங்தான் காரணமாக இருந்தது. மற்றபடி கேப்டன்சி, வியூகம் இவற்றில் தவறு என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. ஆனால் மும்பை அணி பலமான அணியாக இருந்தாலும் அவர்களின் வியூகம் மோசமாக சொதப்பி உள்ளது.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

மும்பை அணியில் பேட்டிங் ஆர்டர் நன்றாகவே இருக்கிறது. ரோஹித், இஷான், சூர்யா குமார், பொல்லார்ட் போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். பிரேவிஸ், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களும் அதிரடியாக ஆடி வருகின்றனர். பவுலிங் என்று பார்த்தாலும் பும்ரா, முருகன் அஸ்வின், மில்ஸ், பேசில் தம்பி போன்ற நல்ல பவுலர்கள் படை இருக்கிறது. ஆனாலும் அந்த அணி மோசமாக தோல்வி அடைய வியூகம் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

கேப்டன்சி சொதப்பல்

கேப்டன்சி சொதப்பல்

முக்கியமாக கடந்த சீசன்களில் இல்லாத கேப்டன்சி சொதப்பல் இந்த சீசனில் ரோஹித் சர்மாவிடம் அதிகம் காணப்படுகிறது. உதாரணமாக நேற்று போட்டியில் பவர் பிளேவில் முருகன் அஸ்வினை பவுலிங் போட ரோஹித் சர்மா அழைத்தார். மயங்க் அகர்வால் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக ஆடுவார். அப்படி இருக்கும் போது, முன்னாள் பஞ்சாப் வீரர் முருகனை ரோஹித் சர்மா பவுலிங் போட வைத்தது பெரிய சர்ச்சையானது.

பீல்டிங் செட்டப்

பீல்டிங் செட்டப்

அந்த ஓவரிலேயே அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என்று மயங்க் விளாசினார். அதேபோல் இன்னொரு ஓவரில் லாங் ஆப்பில் பொல்லார்ட் பீல்டிங் செய்து கொண்டு இருந்தார். அவரை போய் மிட் ஆப்பிற்கு பீல்டிங் செய்ய ரோஹித் அழைத்தார். சரியாக அடுத்த பந்தே தவான் லாங் ஆப் திசையில் பவுண்டரி அடித்தார். ரோஹித் பீல்டிங் மாற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்தில் தவான் அவுட்டாகி இருப்பார்.

ரோஹித் கேப்டன்சி

ரோஹித் கேப்டன்சி

இப்படி நேற்று போட்டியில் பல இடங்களில் ரோஹித் கேப்டன்சி சொதப்பலாக இருந்தது. அதிலும் சில இடங்களில் ஓவர் ரொட்டேஷன் மிக மோசமாக இருந்தது. இந்த சீசனில் டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராகவும் ரோஹித் கேப்டன்சி இதேபோல்தான் சொதப்பலாக இருந்தது. இந்திய கேப்டனாக இருப்பவர்கள் ஐபிஎல் கேப்டன்சியில் சொதப்ப வேண்டும் என்பது விதியோ என்னவோ இதுவரை நன்றாக கேப்டன்சி செய்து வந்த ரோஹித் மிக மோசமாக ஏமாற்றம் அளித்துள்ளார்.

5 தோல்வி

5 தோல்வி

கேப்டன்சி காரணமாக ரோஹித் சர்மாவின் பேட்டிங்கும் மோசமாகவே உள்ளது. நேற்று போட்டியில் 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அதை தவிர மற்ற போட்டிகளில் அவர்களின் பேட்டிங் மிகவும் சொதப்பலாகவே இருந்தது. எப்போதும் மும்பை அணிக்கு ஆதரவாக பேசும் சஞ்சய் மஞ்சீரேக்கர் ஆகியோர் கூட ரோஹித் சர்மா பதவி விலக வேண்டும். பொல்லார்ட் கேப்டனாக பதவி ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர். இன்னும் பல கிரிக்கெட் தலைகள் ரோஹித் சர்மா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜினாமா

ராஜினாமா

மும்பை அணியில் ரோஹித் சர்மா கேப்டன்சியில் சொதப்புவது மொத்தமாக இந்திய அணிக்கும் சிக்கலாகும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்தடுத்து 5 தோல்வி அவரின் கான்பிடன்சை காலி செய்யும். இது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது ஐபிஎல் கேப்டன்சியில் அவர் சொதப்பி வருவது இந்திய அணியின் கேப்டன்சியில் அவரின் நம்பிக்கையை தகர்க்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே தனது கேப்டன்சியில் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார்.

English summary
IPL 2022: Rohit Sharma Captaincy is not up to the mark for MI, What he has to do? 2022 ஐபிஎல் தொடரில் மும்பை அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்தது மும்பை அணி ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X