மும்பையில் நடுரோட்டில் பெண்ணுக்கு அடி உதை.. ராஜ்தாக்கரே கட்சியினர் சம்பவம்.. பரவும் வீடியோ!
மும்பை: மும்பையில் மெடிக்கல் ஷாப் முன்பு விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்கள் சிலர் நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தில் அறைந்து தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
Recommended Video
மகாராஷ்டிர மாநிலத்தில் மண்ணின் மைந்தன் கோட்பாடுடன் செயல்படும் கட்சிகள் சிவசேனா மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா.
உத்தவ் தாக்கரேவிடம் கருத்து வேறுபாடு மற்றும் சில காரணங்களால் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற தனிக்கட்சியை கடந்த 2016-ஆம் ஆண்டு ராஜ்தாக்கரே மும்பையில் தொடங்கினார்.

ஏக்நாத் ஷிண்டே அணியுடன் கூட்டணியா?
ஆக்ரோஷ அரசியலுக்கு பெயர் போன நவநிர்மாண் சேனா கட்சியினர் நடத்தும் போராட்டங்களும் அவ்வப்போது மக்கள் மத்தியில் கவனம் பெறும். தற்போது சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுடன் ராஜ்தாக்கரே நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே இன்று கூட ராஜ் தாக்கரேவை அவரது இல்லம் சென்று சந்தித்தார். இதனால், மும்பை மாநகராட்சி தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் ராஜ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம் என்று மகாராஷ்டிர அரசியலில் யூகங்கள் கொடி கட்டி பறக்கின்றன.

கட்சிக்கு தர்மசங்கடம்
இது ஒருபுறம் இருக்க மும்பையில் பட்டப்பகலில் பெண் ஒருவரை கொடூரமாக நவநிர்மாண் சேனா கட்சியினர் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில், நவநிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த வினோத் அர்கில் என்ற நிர்வாகிகள் தலைமையில் வந்த கட்சியினர் மும்பா தேவி பகுதியில் விளம்பர பதாகைகளை வைப்பதற்காக கம்பம் ஒன்றை நட முயன்ற வைத்துள்ளனர்.

எட்டி உதைத்தார்
ஆனால், அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்திருந்த பிரகாஷ் தேவி என்ற பெண், விளம்பர பலகைகள் தனது கடையை மறைக்கும் வகையிலும் இடையூறாக இருப்பதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நவநிர்மாண் சேனா கட்சியினர், அப்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். முதலில் கன்னத்தில் ஓங்கி அறையும் ஒருவர், தொடர்ந்து காலால் எட்டி உதைக்கிறார். இதில் நிலை குலைந்து அந்தப் பெண் கீழே விழுகிறார். இந்தக் காட்சிகளை அங்குள்ளவர்கள் படம் பிடித்ததாக தெரிகிறது.

போலீசில் புகார்
இந்தக் காட்சிகளை அங்குள்ளவர்கள் படம் பிடித்ததாக தெரிகிறது. எனினும் யாரும் இதை தடுக்க முன்வரவில்லை. பார்த்தபடியே கடந்து செல்கின்றனர். தன்னை தாக்கிய நவநிர்மாண் சேனா கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரகாஷ் தேவி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். எனினும், இந்த சம்பவம் தொடர்பாக மகராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications