Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 டீ.. 2 சமோசா 490 ரூபாயா? மும்பையில் அச்சே தின்.. நெட்டிசன்களை அதிர வைத்த பில்.. இதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சமோசா மற்றும் ஒரு டீ ரூ.490க்கு விற்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் அதன் பில்லை பகிர்ந்து 'நல்ல நாள்'(அச்சே தின்) வந்துவிட்டது என்று விமர்சித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது பெறும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த 11 மாதங்களாக சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இதனையடுத்து கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் இந்த பணவீக்கம் 5.88 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதுபோல மொத்த பண வீக்கமும் கடந்த 18 மாதங்களில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த நிலையில் தற்போது 5.85 சதவிகிதமாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனாலும் விலைவாசியை பொருத்த அளவில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதாக பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக காய்கறி, பால், இறைச்சி, அரிசி போன்ற உணவு பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பத்திரிகையாளர் ஒருவர் போட்டுள்ள ட்வீட் இது குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பி இருக்கிறது.

ஒரு டீ, ரெண்டு சமோசா

ஒரு டீ, ரெண்டு சமோசா

இவர் பகிர்ந்துள்ள பில்லில் ஒரு சமோசா ரூ.130 எனவும் ஒரு இஞ்சி டீ ரூ.160 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒன்று ரூ. 70 என்றும் மொத்தமாக ரூ.490 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.23.34 ஜிஎஸ்டியும் அடக்கம். இந்த பில்லை பகிர்ந்த பத்திரிகையாளர் இத்துடன் 'நல்ல நாள் வந்துவிட்டது' என்று கூறி இந்த அதீத விலையை கலாய்த்துள்ளார். இதற்கு பலரும் கடும் எதிர்ப்புகளையும், ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர். "ரயில் பயணத்தில் இதைவிட விலை குறைவாக உணவு பொருட்கள் கிடைக்கும் எனவே நீங்கள் அங்கே ஏன் முயற்சிக்கக்கூடாது?" என்று ஒரு ட்விட்டர் பயனர் இவருக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

இன்னொரு பயனர், "2014க்கு முன்னர் நீங்கள் மும்பையில் உணவு சாப்பிட பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தீர்கள். ஆனால் தற்போது பேடிஎம் போன்ற டிஜிட்டல் பணப்பரிமாற்ற வசதி இதனை எளிதாக்கியுள்ளது. அதேபோல முன்பு இருந்த விமான சேவையும் தற்போதுள்ள விமான சேவையும் கணக்கிட்டு பாருங்கள். விமான சேவை அதிகரித்திருக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும் சிலர், "விமான நிலையங்களில் கடையின் வாடகை அதிகமாக இருப்பதால் இது போன்று கட்டணமும் அதிகமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். மும்பை விமான நிலையத்தைவிட ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இதைவிட கண்டனம் குறைவாக உள்ளதாகவும் சில பயனர்கள் இவருக்கு பதிலளித்துள்ளனர்.

பணவீக்கம்

பணவீக்கம்

கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் கடுமையான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இதன் தாக்கத்திலிருந்து இன்னும் கூட சில நாடுகள் முழுமையாக மீளவில்லை. இந்தியாவை பொறுத்த அளவில் கடந்த செப்டம்பரில் சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதமாகவும், அக்டோபர் மாதத்தில் 6.77 சதவிகிதமாகவும் இருந்தது. மறுபுறம் ரெப்கோ வங்கி வட்டி விகிதத்தை கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இதன் காரணமாக வீட்டு வட்டி கடன் தொகையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் தற்போது இந்த பணவீக்கம் 5.88 சதவிகிதமாக குறைந்துள்ள நிலையில் இது மேலும் குறையும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 10 டிரில்லியன்

10 டிரில்லியன்

இது இவ்வாறு இருக்க மறுபுறத்தில் அடுத்த ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்று ஆய்வுகள் கூறியுள்ளன. இதன் காரணமாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு விலைவாசி அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். நிலைமை இதேபோல இருந்தால் 2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி என்பது வெறும் 2%ஆகதான் இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவை பொறுத்த அளவில் வரும் 2035ம் ஆண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக பரிணமிக்கும். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் எனவும் இங்கிலாந்தின் வணிக மேலாண்மை ஆலோசக நிறுவனமான CEBR கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+