நடிகை துனிஷா சர்மா தற்கொலை.. காரணம் “லவ் ஜிஹாத்”! நடிகருக்கு எதிராக குண்டை தூக்கிபோட்ட பாஜக எம்எல்ஏ
மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை துனிசா சர்மா தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மரணத்துக்கு லவ் ஜிஹாத்தான் காரணம் என்று பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். உயிரிழந்த நடிகையின் காதலனை கைது செய்து 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏவின் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் பிரபலமான தொலைக்காட்சி நடிகையாக இருந்தவர் துனிஷா ஷர்மா. 20 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வாசை கிராமத்தில் உள்ள தொலைக்காட்சி செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
துனிசா சர்மாவின் இந்த மரணம் பெரும் பரபரப்பையும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. துனிஷா சர்மாவின் இந்த மரணத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக எம்.எல்.ஏ. ராம் கதாம்
இந்த நிலையில் துனிஷா சர்மாவின் இந்த மரணம் தொடர்பாக பலர் பலவிதமான காரணங்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் வதந்திகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் துனிஷா சர்மாவின் மரணம் குறித்து மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ. ராம் கதாம் புதிய காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

லவ் ஜிஹாத்
துனிஷா சர்மாவின் மரணத்துக்கு லவ் ஜிஹாத்தான் காரணம் என்றும் அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துனிஷா சர்மா, ஷீஜான் கான் என்பவரை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ள பாஜக எம்.எல்.ஏ., தற்போது அவர் உயிரிழந்து இருப்பது சந்தேகம் அளிக்கிறது என்றார்.

பின்னணியில் அமைப்பு
துனிஷா சர்மாவின் மரணத்தின் பின்னணியில் லவ் ஜிஹாத் காரணமாக இருக்கலாம் என்றும், அவரை பின்னால் இருந்து இயக்கும் அமைப்புகளை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறார். இந்த மோசமான மரணத்துக்கு அந்த அமைப்புகளே காரணமாக இருக்கும் எனவும் அவர் கூறி உள்ளார்.

நீதி வேண்டும்
"துனிஷா சர்மாவின் குடும்பத்தினருக்கு 100 சதவீதம் நீதி கிடைக்க வேண்டும். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? இதன் பின்னால் லவ் ஜிஹாத் இருக்கிறதா? அல்லது வேறு ஏதும் காரணமா? விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும். சதிகாரர்கள் யார்? ஷீஜன் கானுக்கு பின்னால் இருக்கும் அமைப்பு எது என கண்டுபிடிக்க வேண்டும்.

பெற்றோர் புகார்
போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்." என்றார். இதுகுறித்து துனிஷா சர்மாவின் தாய் கூறுகையில், ஷீஜன் கானும் எனது மகள் துனிஷாவும் காதலித்து வந்தார்கள். கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இருவரும் பிறந்தனர். அதுவும் அவரது மரணத்துக்கான காரணமாக இருக்கலாம்." என்றார்.

ஒன்றாக நடித்த துனிஷா - ஷீஜன்
ஷீஜன் கானும், துனிஷா சர்மாவும் 'அலி பாபா: தஸ்தான் ஈ காபுல்' என்ற டிவியில் நிகழ்ச்சியில் ஒன்றாக நடித்து வந்தனர். அப்போது இருவரும் காதலித்து உள்ளனர். துனிஷாவின் மரணத்தை தொடர்ந்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஷீஜன் கான் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றன.

4 நாள் போலீஸ் காவல்
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்த நிலையில் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இதுகுறித்து ஷீஜன் கானின் வழக்கறிஞர் தெரிவிக்கையில், "நடிகர் ஷீஜன் மீது அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எந்த தற்கொலை கடிதமும் கண்டுபிடிக்கப்படவில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications