சீமானின் 'பச்சை மட்டை' போல..மகாராஷ்டிரா ஆதித்ய தாக்கரேவின் 'ஐஸ் கட்டி' வைத்தியம் எச்சரிக்கை!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தொண்டர்களை சித்ரவதை செய்யும் அனைவரையும் புதிய ஆட்சி அமைந்ததும் போலீஸ் சித்ரவதையான 'ஐஸ் கட்டியில்' படுக்க வைப்போம் என உத்தவ் தாக்கரே மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வரும் 20-ந் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நவம்பர் 20-ந் தேதி 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சரும் உத்தவ் தாக்கரே மகனுமாகிய ஆதித்ய தாக்கரே, சிவசேனா தொண்டர்களை பாஜக கூட்டணி ஆட்சி சித்ரவதை செய்து வருகிறது. எங்களது தொண்டர்களை சித்ரவதை செய்பவர்களுக்கு 'ஐஸ் கட்டி' தண்டனை (போலீஸ் சித்ரவதை) இருக்கிறது. ஐஸ் கட்டியில் படுக்க வைத்துதான் பதில் தருவோம் என்றார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் அமைச்ச ராம்தாஸ் கதம், ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியில் ஆதித்ய தாக்கரேவின் நண்பராக என் மகன் இருந்தார். ஆனாலும் என் மகனையும் அவரது ஆதரவாளர்களையும் ஓரம் கட்டி ஒழித்துக் கட்டியவர்தான் ஆதித்ய தாக்கரே. உத்தவ் தாக்கரே ஆட்சியில் எனக்கு அமைச்சர் பதவி மறுத்துவிட்டனர். எங்கள் குடும்பத்துக்கே துரோகம் செய்தவர் ஆதித்ய தாக்கஏ. அவர் இப்படி பேசுவது கண்டனத்துக்குரியது என்றார்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் பொதுக் கூட்டங்களில் பேசுகையில், நாம் தமிழர் கட்சி ஆட்சியில் தங்களை விமர்சித்தவர்களை எல்லாம் பச்சை மட்டையால் வெளுத்தெடுப்பேன் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். தற்போது அவரது பாணியில் ஆதித்ய தாக்கரே, ஐஸ் கட்டியில் படுக்க வைப்போம் என எச்சரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications