மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவருடன் ஷிண்டே சந்திப்பு.. மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு

Google Oneindia Tamil News

மும்பை: சிவசேனா யாருக்கு என்பதில் இன்னும் பிரச்சினை ஓயாத நிலையில் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவருடன் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் தலமையிலான பாஜனதாவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.

ஆனால் முதல்வர் பதவி பிரச்சினையில் பாஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

எடப்பாடி வைத்த 8 கன்னி வெடிகள்! மிஸ்ஸான பெரிய பாயிண்ட்! பொதுக்குழு வழக்கில் வெடிக்குமா? நடந்தது என்ன எடப்பாடி வைத்த 8 கன்னி வெடிகள்! மிஸ்ஸான பெரிய பாயிண்ட்! பொதுக்குழு வழக்கில் வெடிக்குமா? நடந்தது என்ன

 மகாராஷ்டிர அரசியல்

மகாராஷ்டிர அரசியல்

இதனால் அதிரடியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணியில் இருந்து விலகி, இந்துத்வா கொள்கையில் மாறுபட்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி கடந்த 2 ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்துவந்தது. இந்த நிலையில், திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவின் நெருக்கமானவருமான ஏக்னாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார்.

 இரண்டாக பிரிந்த சிவசேனா

இரண்டாக பிரிந்த சிவசேனா

தொடர்ந்து அவர் தனக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களை திரட்டி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்து உத்தவ் தாக்கரேக்கு பெருத்த தலைவலியை உருவாக்கினார். சிவசேனா அதிருப்தி அணியாக உருவாகிய ஏக்னாத் ஷிண்டே பாஜனதாவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்னாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா இரண்டாக பிரிந்தது.

 ஆதரவு திரட்ட முயற்சி

ஆதரவு திரட்ட முயற்சி

இதையடுத்து இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கோரி வருகிறது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளநிலையில், உடைபட்ட சிவசேனாவை சீரமைக்க முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே போராடி வருகிறார். அதன்படி அவர் மாநிலம் தழுவிய அளவில் மகா பிரபோதன் யாத்திரையை தொடங்குவதாகவும் அறிவித்தார். இதிலும் முதலாவதாக, ஏக்நாத் ஷிண்டேவின் சொந்த தொகுதியாகவும் அவரது கோட்டையாகவும் கருதப்படும் தானேவில் இருந்து இந்த யாத்திரையை உத்தவ் தாக்கரே தொடங்க இருக்கிறார்.

 ஏக்னாத் ஷிண்டே சந்திப்பு

ஏக்னாத் ஷிண்டே சந்திப்பு

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு நெருங்கியவரும், அவரது உதவியாளருமான மிலிந்த் நர்வேர்க்கரின் வீட்டுக்கு நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சென்றார். மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற முதல்வர் ஏக்னாத் ஷிண்டே மிலிந்த் நர்வேக்கருடன் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

 விநாயகரை வழிபடவே

விநாயகரை வழிபடவே

உத்தவ் தாக்கரேவுக்கு வலது கரம் போல் செயல்படும் மிலிந்த் நர்வேர்க்கரை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஏக்னாத் ஷிண்டே, மிலிந்த் நர்வேர்க்கரின் வீட்டில் இருந்த விநாயகரை வழிபடவே சென்றதாகவும் அப்போது இருவரும் பேசியதாகவும் கூறினார். உத்தவ் தாக்கரேவுக்கு வலது கரம் போல் செயல்படும் மிலிந்த் நர்வேர்க்கரை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஏக்னாத் ஷிண்டே, மிலிந்த் நர்வேர்க்கரின் வீட்டில் இருந்த விநாயகரை வழிபடவே சென்றதாகவும் அப்போது இருவரும் பேசியதாகவும் கூறினார்.

English summary
The issue of who owns the Shiv Sena is not over Maharashtra Chief Minister Eknath Shinde's meeting with someone close to Uddhav Thackeray has created a stir in politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X