மகாராஷ்டிரா அரசியல்! 2 மாதங்களுக்கு முன்பே உளவு துறை கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்? கோட்டைவிட்ட தாக்ரே
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தைக் கணிக்கத் தவறிய உளவுத் துறை மீது கேள்விகள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிராவில் இருக்கும் மகா விகாஸ் அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாகவே அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
அமைதியாக இருந்த மகாராஷ்டிர அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் சிவசேனா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று- காங். மூத்த தலைவர் கமல்நாத்

பலன் இல்லை
முதலில் தனது ஆதரவாளர்கள் உடன் அவர் சூரத்தில் தங்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிவசேனா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தான் தனக்குப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் பலன் தரவில்லை.

ஆலோசனை
முதலில் தனது ஆதரவாளர்கள் உடன் அவர் சூரத்தில் தங்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிவசேனா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தான் தனக்குப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் பலன் தரவில்லை.

ஆலோசனை
இந்தச் சூழலில் சிவசேனா சார்பில் மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளாத எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் பொறுப்பில் இருந்து தாக்ரே ராஜினாமா செய்யக் கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சரத் பவார்
மகாராஷ்டிராவில் திடீரென இப்படியொரு அரசியல் குழப்பம் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்று கூட்டணியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திலும் கூட சரத் பவார் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். தனது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டிய பவார், இந்த விவகாரம் குறித்தும் உளவுத்துறை ஏன் எச்சரிக்கையைக் கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இரு மாதங்கள்
இது மகாராஷ்டிராவின் அரசியல் தலைவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் மாநில உளவுத் துறையின் திறன் மீதான கேள்வியை எழுப்பும் வகையில் இருக்கிறது. உளவுத் துறை இந்த நெருக்கடியை முன்கூட்டியே அறியத் தவறிவிட்டதாகவும் பலரும் சாடினர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரு மாதங்களுக்கு முன்னரே ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தரப்பு
ஏக்நாத் ஷிண்டே உட்பட 8 முதல் 10 எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் தொடர்பில் இருப்பதாக உளவுத் துறை தனது அறிக்கையில் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசுக்கு இந்த ரகசிய அறிக்கை அளித்துள்ளனர். இருந்த போதிலும், அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துள்ளது.

உளவு துறை
மகாராஷ்டிராவின் அரசியல் மாற்றங்களைக் கண்காணிக்கும் மாநில உளவுத் துறை, மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள், பயங்கரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ரிப்போர்ட் கொடுக்கும். பெரும்பாலும் அரசியல் மாற்றங்கள் குறித்த ரிபோர்ட்டுகள் அரசு உயர் அதிகாரிகளுக்கு வாய்மொழியாகவே கொடுக்கப்படும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சொல்ல முடியாது
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அத்தகைய சூழ்நிலையில், உளவுத் துறை உதவியுடன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் வாய்மொழியாகவே இதுபோன்ற தகவல்கள் கொடுக்கப்படும் என்பதால், யாரிடம் இதைத் தெரிவித்தார்கள். எப்போது தெரிவித்தார்கள் என்பது குறித்த தகவல்கள் துல்லியமாகத் தெரியவில்லை" என்றார்.