மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவை தோற்கடிப்பது தான் நோக்கமே! மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்.,க்கு ஆதரவளித்த ஓவைசி கட்சி

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் மகா விகாஸ் அகாடி என கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் மொத்தம் 7 பேர் போட்டியில் உள்ளனர்.

யார் பி டீம்? மகாராஷ்டிரா ராஜ்ய சபா தேர்தலில்.. பாஜகவை அதிர வைத்த ஓவைசி.. பரபர மூவ்! நடந்தது என்ன? யார் பி டீம்? மகாராஷ்டிரா ராஜ்ய சபா தேர்தலில்.. பாஜகவை அதிர வைத்த ஓவைசி.. பரபர மூவ்! நடந்தது என்ன?

285 பேர் ஓட்டளிக்க வாய்ப்பு

285 பேர் ஓட்டளிக்க வாய்ப்பு

மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது. மேலும் வாக்களிக்க ஒரு நாள் ஜாமீன் கோரிய அமைச்சர் நவாப் மாலிக் மற்றும் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோரின் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் மொத்தம் 285 பேர் ஓட்டளிக்க உள்ளனர்.

எந்த கட்சியில் எத்தனை பேர்?

எந்த கட்சியில் எத்தனை பேர்?

ஒவ்வொரு கட்சியில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடம், பாஜகவிற்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் பாஜக 3 வேட்பாளர்களையும், சிவசேனா 2 வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளது. இதனால் கடைசி இடம் யாருக்கு என்பதில் குழப்பம் உள்ளது. மேலும் சுயேச்சை எம்எல்ஏக்கள், பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் சிவசேனா தனது 2வது வேட்பாளரையும், பாஜக தனது 3வது வேட்பாளரையும் வெற்றி பெற வைக்க முயற்சித்து வருகிறது.

காங்கிரசுக்கு ஓவைசி கட்சி ஆதரவு

காங்கிரசுக்கு ஓவைசி கட்சி ஆதரவு

இன்று காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவுரங்காபாத்தை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்பி இம்தியாஸ் ஜலீல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் ஓட்டளிப்பர் என அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் யார்?

காங்கிரஸ் வேட்பாளர் யார்?

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. "ஏஐஎம்ஐஎம் கட்சியின் மகாராஷ்டிரா மாநில 2 எம்எல்ஏக்கள் ராஜ்யசபா உறுப்பினர் தேர்லில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாயர் இம்ரானுக்கு ஓட்டளிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார். ஓட்டுப்பதிவு நடப்பதற்கு முன்பு அவர் கூறியதன் மூலம் 2 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளர் சாயர் இம்ரானுக்கு ஓட்டளிக்கின்றனர்.

பாஜகவை தோற்கடிக்கவே...

பாஜகவை தோற்கடிக்கவே...

மேலும், "பாஜகவை தோற்கடிக்க எங்கள் கட்சி ஏஐஎம்ஐஎம் மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் மகா விகாஸ் அகாடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும் எங்களின் அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள சிவசேனாவுடன் தொடரும்'' எனவும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்பி இம்தியாஸ் ஜலீல் கூறியுள்ளார்.

English summary
The All India Majlis-E-Ittehadul Muslimeen (AIMIM) has decided to vote in favour of the Congress candidate for the Rajya Sabha polls from Maharashtra being held today and say, to Defeat BJP, Owaisi's Party Extends Support Congress Candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X